முக்கிய செய்திகள்

Head News

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் […]

ஸ்ரீநகர்: பன்தாசவுக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை ராணுவப் படை வீரர்கள் ஆறு பேர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகருக்குட்பட்ட பன்தாசவுக் பகுதியில் இன்று துணை ராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் உள்ளிட்ட இரு பாராளுமன்ற தொகுதிகளில் வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையை சேர்ந்த சில வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஒரு […]

காணாமல்போனோரைத் தேடி 5 மாவட்டங்களில் தொடர்கின்றது கவனயீர்ப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறும் கோரி தமிழர் தாயகத்தில் 5 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இந்தப் போராட்டங்கள் குறித்து அரசு தொடர்ந்தும் பராமுகமாகவே இருக்கின்றது எனப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 41ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாளாந்தம் […]

கால அவகாசம் கிடைத்ததும் மீறப்படுகின்றன வாக்குறுதிகள்! – போட்டுத் தாக்குகிறது யஸ்மின் சூகாவின் அமைப்பு

“இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைப்பதாகவும் இராணுவத்தின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போது இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுடன் தொடர்புள்ளதா என்பதை விரிவாக ஆராய்ந்து பார்ப்பதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்த இலங்கை அரசு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுச் சில தினங்களுக்குள்ளேயே அந்த வாக்குறுதியை மீறியுள்ளது.” – இவ்வாறு யஸ்மின் சூகாவைத் தலைமைச் செயற்பாட்டாளராகக் கொண்டியங்கும் சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. போர்க்குற்றச்சாட்டை […]

ஜெனீவா வங்கியில் புலிகளுக்கு கணக்கு, சுவிஸ் புலிகள் தலைவர் தொடர்பு

சர்வதேச புலிகள் வலையமைப்பின் பெருந்தொகையான நிதி ஜெனீவா நகரிலுள்ள பிரபல வங்கியொன்றில் வைப்பில் உள்ளதாகவும், சுவிட்சர்லாந்திலுள்ள புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவுள்ள அப்துல்லா என்பவர் இந்த வங்கிக் கணக்குகளுக்கு பொறுப்பானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. காரியாலயத்துக்கு முன்னால், இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜெனீவாவிலுள்ள குறித்த வங்கியின் கணக்கிலிருந்து நிதி பெறப்பட்டுள்ள போதே இந்த வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற […]

தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது : அமைச்சர் மனோ கணேசன்

அரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது. இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், […]

கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் 279 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இந்த காணிகள் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே காணிகளை […]

மைத்திரி-ரணில் ஆட்சியில் தொடரும் சித்திரவதைகள் ஐ.நா மீள்பார்வைக்கு

ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சாட்சியங்களுடன் கூடிய ஆவணமொன்றினை ஐ.நா மனித உரிமை பேரவையின் சர்வதேச காலாகால மீளாய்வுச் செயற்பாட்டிற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று சமர்ப்பித்துள்ளது. தென்னாபிரிக்கா ஜொஹானஸ்பேர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரீலங்காவில் உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை […]

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 […]

இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் ரூ.1500 கோடி சரக்குகள் தேக்கம்

இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் […]