ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காணப்படுவதாக குறிப்பிடும் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அதனை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பிலான தீர்மானமானது வேறு எவரும் கொண்டுவந்த ஒரு தீர்மானமல்ல எனவும், ஸ்ரீலங்காவின் அனுசரணையுடனேயே அது கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ஜெனீவாத தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் உண்ணாவிரமிருந்து பிணை பெற்றுக்கொள்ள முயல்வார்களாயின் நீதிமன்ற கட்டமைப்பு என்ற ஒரு விடயம் அவசியமற்றத என சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *