சில்லறை விடயங்களுக்காக பிளவடைந்து விட முடியாது. சுரேஷுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு தயாராகவே உள்ளேன். இவ்விடயம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வகிபாகத்தினைக் கொண்டிருக் கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியானது ஏதேச்சதிகாரமாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையில் அக்கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என கூட்டமைப்பின் ஸ்தாபக பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் […]
முக்கிய செய்திகள்
Head News
அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு
வடகொரியாவை அச்சுறுத்தி மிரட்டுகிற வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. ஒலியை விட வேகமாக செல்கிற சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த பி–18 லேன்சர் போர் விமானங்களை தென் கொரியாமீது அமெரிக்கா பறக்கவிட்டது. குவாம் தீவில் உள்ள ஆன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற 2 பி–18 லேன்சர் போர் விமானங்களுடன், ஜப்பானின் போர் விமானங்களும் சேர்ந்துகொண்டன. இதுகுறித்து அமெரிக்க விமானப்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் […]
இத்தாலி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழப்பு
லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் நேற்று நடந்தது. லிபியாவில் இருந்து சில படகுகளில் ஏராளமானோர் புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது படகுகளின் என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகுகள் கடலில் மூழ்கின. அப்போது அங்கு […]
வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை பொதுமக்கள் அவதி
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தொடக்கத்திலேயே அதிக அளவு மழையை வாரி வழங்கி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இத னால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 8 தினங்களில் சென்னையில் மட்டும் வழக்க மாக இந்த மழை சீசனில் பெய்யும் மொத்த மழை யில் 74 சதவீதம் பெய்து விட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் இரவு […]
இன்றைய ராசிபலன் – 4.11.2017
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அரவணைத்துபோங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். மிதுனம்: […]
உலகம் முழுவதும் வாட்ஸ் – அப் சேவை முடங்கியது!
பேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செயல்படாமல் முடங்கியது. வாட்ஸ்-அப் செயலியின் வாயிலாக செய்திகள் செல்லாத நிலையே நீடித்தது. வாட்ஸ்-அப் பயனாளர்கள் பிற சமூக வலைதளங்களில் இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க தொடங்கினர். சர்வர் பிரச்சினை காரணமாகவே வாட்ஸ்-அப் செயலி செயல்பாட்டில் பிரச்சினை நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்-அப் செயலியில் செய்திகள் மட்டும் நகர்வின்றி காணப்பட்டது. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் வாட்ஸ்-அப் […]
தமிழகத்தை நோக்கி வரும் டெமிரி புயல்? – ரமணன் எச்சரிக்கை
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “சென்னையில் ஏறக்குறைய 12 மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது […]
சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பினால் வரலாறு சிங்களக் கட்சிகளை மன்னிக்காது
தமிழர்களின் தலைவரான இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்குக்குத் திருப்பி அனுப்பினீர்கள் என்றால் சிங்களக் கட்சிகளை வரலாறு மன்னிக்காது என்று தெரிவித்தார் அமைச்சர் மனோகணேசன் மறைந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார். சம்பந்தனை, இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும் நிலமைக்குத் தள்ளி விடாதீர்கள். அவரைப் பலவீனப்படுத்தி, தீவிரவாதிகளை பலப்படுத்திவிடாதீர்கள்” என்றும் அவர் கோரினார். அரசமைப்பு நிர்ணய சபையில் இடைக்கால அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய அவர் […]
வடக்கில் நீண்ட நாட்களின் பின் தொடர் மழை.!
வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. யாழ். மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, கிளிநொச்சியில் பல பாகங்களிலும் 3 நாட்களாக கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்கள் […]
இன்றைய ராசிபலன் – 3.11.2017
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக் குள் வீண் சந்தேகம் வந்து விலகும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத் தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண் டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் […]





