வடக்கில் தமிழர்கள் சிலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையில் சில தமிழர்கள் படையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பாலியல் துஸ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டதாக செய்தி சேவையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் குறித்த செய்திசேவையொன்றுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே வட மாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஏற்கனவே இந்த சம்பவங்கள் குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கிய செய்திகள்
Head News
கடவுச்சீட்டு, ஆள் அடையாள அட்டை பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!
2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம் மற்றும் ஏனைய அனைத்து அரசாங்க சேவைகளின் கட்டணங்களும் நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. […]
மைத்திரி, மஹிந்த நேரடிப் பேச்சு! கொழும்பு அரசியலில் பரபரப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மஹிந்தவும்,மைத்திரியும் நேரடியாகச் சந்தித்து பேசுவது நல்லது என்று பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பரஸ்பரம் தீர்மானம் ஒன்றை எடுத்ததை அடுத்தே இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் கொழும்பு […]
இலங்கையில் அதிரடி சுற்றிவளைப்பு! 4 மணிநேர நேரத்தில் 758 பேர் கைது
பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் இணைக்கும் வகையில் 16362 பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த விசேட சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகத்தின் […]
இன்றைய ராசிபலன் I 12.11.17
மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். Loading… ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். நன்மை கிட்டும் […]
ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- சிறிலங்கா
ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பு இராணுவ மருத்துவமனை அரங்கில், இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், போர் […]
திருமலையில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!
திருகோணமலை, உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர், நேற்று (10) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். விநாயகபுரத்தைச் சேர்ந்த கடுக்காமுனை கிராம சேவையாளரான திருமதி காளிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராஜா என்பரின் மகன் பஜிர்வன் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார். வயல் உழுதுவிட்டு, உழவு இயந்திரத்தைக் கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்துக்குள் இறக்கிய போது, உழவு இயந்திரம் புரண்டதாகவும் அதில் இருந்த வீலுக்குள் […]
மகிழ்ச்சியில் சம்பந்தன், சுமந்திரன்…..!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அடங்கலாக சகலருக்கும் நன்மை தரும் யோசனைகள் அடங்கியுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக போராளிகளுக்கு சில உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பெண்களுக்கு சில […]
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு – நாராஹேனபிட்ட இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “சமகாள அரசாங்கம் இராணுவத்தை […]
பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல் பலர் காயம்
பிரான்சின் டுலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் மீது நபர் ஒருவர் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டுலூஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறிருவர் ஆபத்துகட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்து தொடர்பில் 28 […]





