சபாநாயகர் கருஜயசூரிய, ஹன்சாட் அறிக்கையொன்றை தந்திரமாக தயாரித்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை பிவித்துரு ஹெல உருமய கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் மேற்கொண்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை சபாநாயகர் தந்திரமாக தயாரித்துள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார். இதனுடன் கடந்த 14, 15, 16, 19, 21 மற்றும் 23 […]
இலங்கை செய்திகள்
கொழும்பில் பதற்றம்! விசேட அதிரடிப்படை குவிப்பு
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலார் ஒருவர் மீது தாக்கத்தல் மேற்கொண்ட புலனாய்வு அதிகாரி பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று காலை முன்னிலையானார். காலை 9 மணியளவில் ஆரம்பமான விசாரணை மீண்டும் 2.15 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய முப்படைகளின் பிரதானியை […]
தலைவர் பிரபாகரன் வீட்டை சுற்றிவளைத்துள்ள இலங்கை பொலிஸார்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தின் முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படும் நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தலைவர் வாழ்ந்த வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் பணியில் சில இளைஞர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பு இல்லாமல் கூடிய பாராளுமன்றம்
பாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய அமர்வின் போதும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்காக ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, […]
மைத்திரி கொலை சதிக்கும் எனக்கு தொடர்புமில்லை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக நிராகரித்துள்ளார் சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவலை வெளியிட்ட நாமல்குமார ஒரு புலனாய்வு உத்தியோகத்தர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனாதிபதி அவரிடமிருந்தே தகவல்களை பெறுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார் நாமல் குமார தற்போது பொதுஜனபெரமுனவில் இணைந்து தேர்தலில் போட்டியிட முயல்கின்றார் எனவும் […]
பரபரப்படையும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்!!
மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வட கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் , […]
அனைத்து அமைச்சர்களுக்கும் மைத்திரி விடுத்துள்ள அதிரடி உத்தரவு
அரச நிறுவனங்கள் எதற்குமே இப்பொதைக்கு எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளவேண்டாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல அமைச்சர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துளார். இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளார். குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, “அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள் இப்போதைக்கு வேண்டாம். இது காபந்து அரசு என்பதை நினைவில் […]
கிளிநொச்சியில் கோலகலமாக ஆரம்பமாகவுள்ள மாவீரர் தினம்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் தினத்திற்காக தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதுஇடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2018 மாவீரர் நாள் ஏற்பாடுகள் […]
விமலுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு
சொத்து குவிப்பு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில், தனது வருமானத்துக்கு அப்பால் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் விமல் வீரவன்சவுக்கு எதிராக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் […]
யாழில் மாவீரர் நாள் நிகழ்விற்கு எதிராக பொலிஸார்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்குத் தடை உத்தரவை வழங்குமாறு கோப்பாய் பொலிஸார் மனு நகர்த்தல் பத்திரத்தினைத் தாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு மாவீரர் துயிலும் இல்லம் எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த […]





