மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் அவர் தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை இன்றைய தினம் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை விதித்தது. சம்மந்தப்பட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு […]
இலங்கை செய்திகள்
ஜனாதிபதி- ஐ.தே.க.வுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது நாடடின் அரசியல் நிலைமையை சீராக கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பிரதமர் தொடர்பிலும் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் இதில் […]
ரணில் விடயத்தில் மைத்திரி விடாப்பிடி
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “ரணிலுடன் இப்போது மற்றுமல்ல எதிர்காலத்திலும் கூட இணைந்து பணியாற்றும் விருப்பம் எனக்கு இல்லை. இதுவே எனது தீர்க்கமான முடிவாகும். மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியுமென அரசியலமைப்பில் எங்கும் […]
மைத்திரி மோசமாக செயற்படுவதற்கு காரணம் இதுதான்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவாரென அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூர்க்கத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு – வத்தளை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார. மேலும் அவர் தெரிவிக்கையில், “ஐனாதிபதி சிந்திக்காமல் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு விதமாக பேசுகின்றார். மக்களுக்கு […]
மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு?
நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை (113) ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுதிப்படுத்தியுள்ளதால் பிரதமர் பதவியை துறக்கும் முடிவையே மஹிந்த அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ள மஹிந்த, பொதுத்தேர்தலை […]
அரசியல் நெருக்கடி குறித்து சம்பந்தன் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் […]
நாட்டு மக்களிற்கு எதுவும் ஏற்படாது
தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது […]
மைத்திரியின் மனநிலையை அம்பலப்படுத்திய மஹிந்த அணி
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும். நாடாளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் […]
பாராளுமன்றம் கலைக்கபடுவது குறித்து மைத்திரியின் முடிவு என்ன?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலிற்கு அழைப்பு விடுக்கும் உத்தரவை சிறிசேன கடந்த மாதம் விடுத்திருந்தார் எனினும் சிறிசேன அந்த உத்தரவை கைவிடுவது குறித்து சிந்தித்து வருகின்றார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி அந்த உத்தரவை வாபஸ்பெறுவார் இதன் மூலம் தனது நடவடிக்கைக்கு […]
சஜித்தின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரணில்
பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் பதவி ஏற்றுக் கொண்டால் பின்னர் நடைபெறும் பொதுதேர்தலில் போட்டியிடும் போது மக்கள் மத்தியில் தனக்கான ஓர் அங்கீகாரம் இழக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும் […]





