இலங்கை செய்திகள்

பொன்சேகா

மைத்திரி கொலைச் செய்யும் திட்டத்தில் பொன்சேகாவா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது என்றார். நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் சரத் பொன்சேகா தொடர்பில்லை. அவ்வாறான முறைப்பாடுகளும் […]

ரணில் தலைமையில் ஐ.தே.க அவசர கூட்டம்

ஐ.தே.க கட்சியின் கட்சி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தலைமையில் கூட்டம் கூடவுள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஆலோசனை ஒன்று சபையில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதனால் மகிந்த அடங்கியுள்ளார்!

நாம் எதிர்க்கட்சியில் இருப்பதால் அமைதியாகவே இருப்போம் என நினைத்துவிட வேண்டாம். நாட்டுக்கு விரோதமான செயற்பாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக அதற்கான எதிர்ப்பை வெளியிடுவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இன்று எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. நாட்டில் பாரிய சவால் இருக்கும்போதுதான் நாம் […]

Ranil

யாரும் எதிர் பாராத ரணிலின் மற்றொரு அதிரடி அறிவிப்பு!

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைக்கப்படுவதாக பிரதமர் சபையில் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதே குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார். அத்துடன் ஊடகங்கள் மீது பிரதமர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். தற்போது கறுப்பு ஊடகங்கள் தான் நாட்டில் செயற்படுகின்றன. ஜனாதிபதிக்கு நான் அனுப்பாத பெயர்களை கூட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது எவ்வாறு […]

மகிந்த

மகிந்தவிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை அரசியலமைப்புப் பேரவையில் மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் அதி விரைவில் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ல இடைக்காலக் கணக்கறிக்கைக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய அமைச்சரவை விவரங்கள்

அரச தலைவர் செயலகத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்பாக புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்றது. அதன் முழுமையான விவரங்கள் வருமாறு: 1.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர். 2.மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர். 3.திலக் மாரப்பன – வெளிவிவகார அமைச்சர் 4.ஹரின் பெர்னான்டோ – தொலைத்தொடர்புகள்,டிஜிட்டல் உட்கட்டமைப்பு, […]

பொலிஸ் அதிகாரத்தை சிறிசேன வழங்க மறுத்தது ஏன்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் […]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

வெடித்தது அடுத்த பிரச்சனை! கடும் அதிர்ச்சியில் ரணில்

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் இழுபறி நிலை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களை தாமே தெரிவுசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் இடம்பெற்ற ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் அமைச்சுக்களின் செயலாளர்கள் விடயத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னர் இருந்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பதிலாக புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் […]

Maithripala Sirisena

மைத்திரி வெளியிட்டார் உத்தியோக பூர்வ அறிவிப்பை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இன்றையதினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். அதற்கமைய இன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. அதற்கமைய இன்று முதல் ஐக்கிய தேசிய […]