முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரா அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரா என்பது தொடர்பில் அவரே தெளிவுபடுத்த வேண்டுமென, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என கூறியுள்ளதாகவும், […]
இலங்கை செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க கூடாது!
கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல், ஓரின சமூகத்துக்குரியவராக செயற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காக்காது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அளுநர்களை நியமித்துள்ளார். […]
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் வாய்ப்பில்லை!
இனங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் அரசமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் பலவந்தமாக புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் வாய்ப்பில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி இருக்கும் பசில்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், தமிழர்கள் தமக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கிளிநொச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரணங்கள் வழங்க பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர். நாமும் பொதுஜன பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். மக்களுக்கு பயனுள்ள ஏதேனும் செயற்பாட்டை […]
கதிர்காம பக்தர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை – பெலியத்த ரெயில் பாதையின் வெள்ளோட்ட தொடருந்து சேவை இன்று இடம்பெறவுள்ளது. பரீட்சார்த்தமட்டத்தில் இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த தொடருந்து பாதையின் நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களின் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ் இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக […]
நாட்டை இரண்டாக்க சதி திட்டம் தீட்டும் கூட்டமைப்பு
கூட்டமைப்பால் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்ட மூலம் எந்த தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமையும். காரணம் அவர்களின் நோக்கம் நாட்டை இரண்டாக பிளவடையச் செய்வதாகும். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக இருந்து கொண்டு அவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் எதனையும் செய்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய அரசியலமைப்பிற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை […]
பொன்சேகா உட்பட ஒருவருக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் அண்மைக்காலமாக உச்சக்கட்ட கருத்து […]
சந்திரிக்கா மீது கடுமையாக குற்றம்சாட்டிய ரவி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க , சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும் அழிப்பதற்கு முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சிங்கள மொழி வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைகழகத்தில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தை அழகு படுத்தும் செயற்திட்டம் நல்லூர் பிரதேச சபையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. சபையின் தவிசாளர் தலைமையில் 50 பயன்தரு மரங்கள் பல்கலைக் கழக சூழலில் நடப்பட்டன.மரங்களைப் பாதுகாக்கும் வகையில் நெற்றினால் அமைக்கப்பட்ட வேலிகளும் போடப்பட்டன. அமைக்கப்பட்ட சுற்று வேலிகளில் மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் தொங்க விடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் அதிரடி…
கண்டி நகரில் பிரதான சுற்றாடல் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் கட்டுகஸ்தோட்டை – கொஹாகொட குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொஹாகொட கழிவு நிலையத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அசம்பாவிதம் போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் குறித்த பிரச்சினையை […]





