இலங்கை செய்திகள்

இலங்கை திரும்பும் அகதிகள்! யாழ் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கை

தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் ஈழத் தமிழர்களின் 24 குடும்பங்கள் இலங்கைத் திரும்பவுள்ளனர்.நாளையும், எதிர்வரும் 28ம் திகதியும் குறித்த அகதிகள் இலங்கைத் திரும்பவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர். தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் […]

பலாலியில் விரைவில் தரையிறங்கும் இந்திய விமானம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளத்தில் வெகு விரைவில் தமது விமான சேவைகளை இந்தியா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பலாலி விமான நிலையத்தில் அடுத்த மாதத்தில் விமான சேவைகளை […]

பிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரிமாளிகையில் விசேட சமயபூஜைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட தேவையுடையவர்களுக்கு பிரதமர் சக்கர நாற்காலிகளையும் வழங்கி வைத்தார். அத்துடன் பிரதமரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏற்பாடு […]

ஈரான் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை!

தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஈரான் கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளது. மேலும் இதன்போது ஈரானிய பிரஜைகள் 9 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கப்பலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட […]

ரணில் தொடர்பில் மஹிந்தவிடம் கசிந்த ரகசியம்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பல முன்னணி அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரபலம் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார். இது குறித்து தனது நிலவரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜோதிடர் ஒருவரை நாடியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தனது சாதக பலன்படி எவ்வாறான பெறுபேறு கிடைக்கும் என ஆராய்ந்துள்ளார். எனினும் அவரின் எதிர்பார்ப்பிற்கு மாறான பதில் கிடைத்துள்ளது. குறித்த பிரபலம் […]

ரணில் விக்கிரமசிங்க

சர்வாதிகாரியாக மாறிய ரணில்

ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரி அல்ல, அவர் சர்வாதிகாரி […]

மீண்டும் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி!!

தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களை தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் விற்பனை செய்யப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலைகளை செய்யவும் சதி நடந்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் […]

Gotabaya Rajapaksa

கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வலுக்கும் எதிர்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு குமார வெல்கம எம்.பி. போர்க்கொடி தூக்கியிருந்தாலும், கடும் எதிர்ப்பையும்மீறி கோத்தபாயவை களமிறக்கும் தீர்மானத்துக்கு ராஜபக்சக்கள் வந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.குறித்த தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின்னர், குமார வெல்கம, மஹிந்த அணிக்கு […]

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்

வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். […]

வலுப்பெற்றது இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்பகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 […]