இலங்கை செய்திகள்

இராணுவத்தின்

இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று

இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 17ஆவது தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த […]

பேஸ்புக் தடை

இலங்கையில் பேஸ்புக் தடை செய்ய நடவடிக்கை!

இலங்கையில் பேஸ்புக் தடை செய்ய நடவடிக்கை! இலங்கையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அவமதிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக […]

கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வுகாண முடியாது;அரசாங்கம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. […]

திரும்பிவாருங்கள்; ஈழ அகதிகளுக்கு ரணில் அழைப்பு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத புகலிடம்கோரி படகுகளில் சென்று அந்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை கன்பராவில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போதே அவுஸ்ரேலியப் பிரதமருக்கு அருகே நின்று, ஸ்ரீலங்கா பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். […]

காணிகள் விடுவிக்கும்

காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம்

காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை […]

நிலமீட்பு போராட்டத்திற்கு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு நிலமீட்பு போராட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் அண்மையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனவர்களது உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தனர். சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம […]

சைட்டம் பல்கலை

உயர்கல்வி அமைச்சின் கோரிக்கையை உதறியெறிந்த சைட்டம் பல்கலை

உயர்கல்வி அமைச்சின் கோரிக்கையை உதறியெறிந்த சைட்டம் பல்கலை நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை மாணவர்களை சேர்ப்பது நிறுத்தமுடியாது என்று மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தீர்வு கிடைக்கும்வரை 6 மாதங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படி உயர்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளை மருத்துவர் நெவில் பெர்ணான்டோ நிராகரித்துள்ளார். சிறந்த மருத்துவக் கற்கைகளுக்காக தமது பல்கலைக்கழகத்தில் அதிகூடிய சம்பளத்திற்கு விரிவுரையாளர்கள் பணியாற்றுவதாகவும், திடீரென மாணவர்கள் உள்ளீர்ப்பதை […]

சர்வஜன வாக்கெடுப்பு-சந்திரிகா

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது அவசியம் என்றும் […]

ஹிஸ்புல்லாஹ்

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். விமானப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்பிலவு மக்கள் 14 ஆவது […]

கேப்பாபிலவு மக்களின் காணி

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கடிதம் விமானப்படையினர் வசமுள்ள கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாண சபையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பதனால் அவற்றை அடிப்படையாக கொண்டு காணிகளை […]