இலங்கை செய்திகள்

வடக்கு.கிழக்கு மாகாணங்கள் அப்துல் சஜீர் முகமட் சபீர்

வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர்

வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளனம் இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் சஜீர் முகமட் சபீர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தபோது, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட சகப்பான சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் […]

அர்ஜுன் அலோசியஸின்-கம்மன்பில

அர்ஜுன் அலோசியஸின் அட்சயப்பாத்திர இரகசியத்தை போட்டுடைத்தார் கம்மன்பில

அர்ஜுன் அலோசியஸின் அட்சயப்பாத்திர இரகசியத்தை போட்டுடைத்தார் கம்மன்பில மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனும், பிணை, முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளவருமான அர்ஜுன அலோசியஸின் மதுஉற்பத்தி நிறுவனத்தின் வருமானத்தைக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாட்டு மக்களை மதுபோதையில் உறங்கவைத்துவிட்டு திரைமறைவான விடயங்களை ரணில் சாதித்துவருவதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் […]

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம்-ரணில் விக்ரமசிங்க

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த சாசனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த ஏழாம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம், சட்டமாக ஆக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு […]

ட்ரம்ப் பிரசாத் காரியவசம்

ட்ரம்ப் அரசாங்கத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கை

ட்ரம்ப் அரசாங்கத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையாக இச் சந்திப்பு அமைந்திருந்ததென, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. […]

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை […]

மண்மீட்பு போராட்டத்திற்கு

மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: டெனிஸ்வரன்

மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: டெனிஸ்வரன் கேப்பாபுலவு மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனிஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை வடமாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன் சந்தித்தார். கேப்பாபுலவு மக்களைச் சந்தித்து அமைச்சர் பா. டெனஸ்வரன் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களின் போராட்டம் […]

ரணில் அவுஸ்ரேலியா பயணம்

ரணில் அவுஸ்ரேலியா பயணம்

ரணில் அவுஸ்ரேலியா பயணம் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அவுஸ்ரேலியாவுக்கு செல்லவுள்ளார். அவுஸ்ரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, அர்ஜூன ரணதுங்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் பிரதமருடன் அவுஸ்ரேலியா செல்லவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது அவுஸ்ரேலியப் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் […]

யாழில் இந்திய மீனவர்கள்

யாழில் இந்திய மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழில் இந்திய மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 31 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தங்கச்சிமடம், தேசாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தாம் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை […]

முஸ்லிம் மக்களுக்கு

முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன்

முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு வேண்டுமென்றால், முஸ்லிம் மக்களுக்கென சமஷ்டிக் கட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்னர், முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டினை […]

சர்வஜன வாக்கெடு

சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம்

சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் அழுக்குகளை கழுவும் ஒன்றாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி […]