இலங்கை செய்திகள்

எமது இனத்துக்கான-பா.டெனிஸ்வரன்

எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன்

எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன் எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது. எனவே வறுமையை காரணமாக காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது என்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் […]

போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கேப்பாபுலவு

போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள்

போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குமாறும், […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை சந்திப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இச் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமைகள் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் எனவும் தமது குடும்ப நிலைமைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்ததுடன் தமது […]

கீத் நோயாரின் கோட்டபாயவுக்கு தொடர்பு

கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு

கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தொடர்புபட்டுள்ளதாகஇ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை நேற்றைய கல்கிஸை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட கீத் நோயார் தொம்பேயில் உள்ள இராணுவ இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். எனினும், […]

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல்

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம்

பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம் கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்திடமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளது. பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்காக, கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி […]

தமிழ் மக்களுக்குள் கோவிந்தன் கருணாகரம்

தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம்

தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றாரா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது […]

இராணுவக் கப்பல்களுக்கு - பிரதமர் ரணில்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்

இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல் இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஸ்ரீலங்கா தயாரென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய […]

நீதிபதி நியமிப்பு-ஜீ.எல். பீரிஸ்

நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம்

நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட வழக்கறிஞர் இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்து, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விமர்சித்துள்ளமை, இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது. நீதிபதி கண்ணனின் நியமனத்தை குறித்தும், அதனை வழங்கிய ஜனாதிபதியைப் பற்றியும் அவதூறுகள் ஏற்படும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். […]

நில மீட்பு போராட்டம் - ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் கலந்துரையாடப்பட்டு முடிவுக்கு வலியுறுத்தப்படும் என, யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருவதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பில் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் […]

இயக்குநர் எலைன் பியர்சன்

சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன்

சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்கற்றங்கள் குறித்த விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளை பயன்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இயக்குநர் எலைன் பியர்சன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கயைானது ஐ.நா தீர்மானத்தின் தேசிய கூறுகளை நோக்கி முன்னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் சர்வதேச […]