இலங்கை செய்திகள்

கேப்பாப்புலவு மக்கள்

கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்கள் 22 ஆவது நாளாக போராட்டம்

கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்கள் 22 ஆவது நாளாக போராட்டம் முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 22 ஆவது நாளாக கடும் பனிக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு, இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஸ்ரீலங்கா விமானப் படையினரால் […]

முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமிற்கு

முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமிற்கு அருகில் மேலும் பல மனித எச்சங்கள்

முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமிற்கு அருகில் மேலும் பல மனித எச்சங்கள் மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில், ராணுவ முகாமிற்கு அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு துருப்பிடித்த இரும்புக் கம்பிகள், மண்மாதிரிகள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டு மேற்படி எச்சங்கள் பகுப்பாய்விற்காக […]

மனித உரிமை ஆணைக்குழு

மனித உரிமை ஆணைக்குழுவினர் கேப்பாபிலவு விஜயம்

மனித உரிமை ஆணைக்குழுவினர் கேப்பாபிலவு விஜயம் கேப்பாப்பிலவு பிளக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர். மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் […]

பழைய முறையிலேயே தேர்தல் மனோ கணேசன்

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மனோ கணேசன்

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மனோ கணேசன் புதிய தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்படுகின்றதென தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கை கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சிறுபான்மை கட்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இதுகுறித்து நேற்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தின. இச் சந்திப்பின்போது […]

திகளின் வாக்குகள் பரவிப்பாஞ்சான் போராட்டம்

திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம்

திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை நேற்றைய தினம் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக நேற்றுக் காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். […]

வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும் […]

இராணுவத்தின் பாலியல் முகாம்களில்

இராணுவத்தின் பாலியல் முகாம்களில் தமிழ் பெண்கள்

இராணுவத்தின் பாலியல் முகாம்களில் தமிழ் பெண்கள் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக தடுத்து வைத்திருந்ததுடன், பாலியல் முகாம்களையும் வைத்திருந்ததாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை நடத்தியது மற்றும் ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகளுடன் தொடர்புடையதாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட ஆறு பேரின் விபரங்களையும் இரகசிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.ரி.ஜே.பி என்ற சர்வதேச உண்மைக்கும் […]

அரசியலமைப்பு பணிகள் மீள ஆரம்பம்

அரசியலமைப்பு பணிகள் மீள ஆரம்பம் – பிரதமர் ரணில்

அரசியலமைப்பு பணிகள் மீள ஆரம்பம் – பிரதமர் ரணில் இடைநிறுத்தப்பட்டிருந்த புதிய அரசியல் யாப்பு பணிகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி அரசியலமைப்பிற்கான பிரதான வழிநடத்தல் குழு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கும் நோக்கில் முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டது. இதன்பிரகாரம் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பிரதான வழிநடத்தல் குழு நிறுவப்பட்டதோடு அதன் கீழ் 6 உப […]

ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை

ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்?

ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் இம்முறை நடைபெறும் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கை மிகக் காட்டமானதாகவும், எச்சரிக்கை மிகுந்ததாகவும் அமையும் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அமர்வின் முதல் நாளில் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் […]

பிள்ளையான் விளக்கமறியல்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் எம்.கணேசராஜா இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். கொலைச் சந்தேகநபர்களான […]