இலங்கை செய்திகள்

பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம்

பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம்

பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி, தமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் […]

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்

கப்பம் இன்றி விடுவிப்பட்டது இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்

கப்பம் இன்றி விடுவிப்பட்டது இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் இருந்த எட்டு இலங்கையர்களும் கப்பம் இன்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கப்பல் தலைவர் நிக்கலஸ் அந்தோனி தெரிவித்துள்ளார். சோமாலிய படையினருக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து எட்டு இலங்கை பணியாளர்களும், கப்பலும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்கவும் இணங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு திருகோணமலையில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், குறித்த பிரதேசத்தில் நான்கு வைத்திய நிபுணர்களை உள்ளிடக்கிய 23 பேர் கொண்ட விசேட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். […]

சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி

சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்க நிதி ஒதுக்கீடு

சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்க நிதி ஒதுக்கீடு சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மீள்குடியேற்ற அமைச்சு மேற்படி நிதியை வழங்கியுள்ளது. வலிகாமம் மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை கடைத் தொகுதிக்கும், சந்தைக்குமான திட்டங்கள் மக்களால் கடந்த பல ஆண்டுகளாக […]

இயற்கையை நாம் அழித்தால்

இயற்கையை நாம் அழித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்

இயற்கையை நாம் அழித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் இயற்கையை நாம் அழிவுறச் செய்தால் அதன் விளைவால் ஏற்படும் அழிவையும் நாமே எதிர்க்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பாதுகாப்பான இலங்கை எனும் தொனிப்பொருளின் கீழ், மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன்கோயில் வீதியில் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் 12.5 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) இன்று […]

தமிழர்களின் போராட்டங்களை

தமிழர்களின் போராட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒப்பிடாதீர்

தமிழர்களின் போராட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒப்பிடாதீர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொள்ளும் நியாயமான போராட்டங்களை தென்னிலங்கையில் கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் போராட்டங்களுடன் ஒப்பிட வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் அரச காணிகளை தமக்கு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், பூர்வீகமாக தாம் வாழ்ந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறு வலியுறுத்தியே போராடுவதாகவும் […]

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள “அனைத்துலக விசாரணைப்பிடிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுத்தது சர்வதேசமட்டத்தில் தேசிய அரசு அடைந்த மிகப்பெரிய வெற்றியாகும்” என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். “போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். “உரிய வழியில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கியுள்ளன. எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் […]

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நேற்றுக் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன. அதன் இறுதியில் ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கவென மனுக்களும் கையளிக்கப்பட்டன. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இராணுவத்திடம் காணிகைளைப் பறிகொடுத்த மக்கள் […]

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள் - சூக்கா

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள்! – சூக்கா சுட்டிக்காட்டு

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள்! – சூக்கா சுட்டிக்காட்டு “ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் 6 கொடூரமான சித்திரவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று பதிவாகியுள்ளது.” – இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இலங்கையில் […]

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள் - ஜகத் ஜயசூரியவை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை “வவுனியா ஜோசப் முகாமில் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தெளிவான – உறுதியான ஆதாரங்கள் போதியளவு உள்ளன. இந்த முகாமின் பொறுப்பாளராகப் பணியாற்றிய இப்போதைய பிரேஸில் தூதுவர் ஜகத் ஜயசூரியவை விசாரணை செய்ய வேண்டும்.” – இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கோரியுள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள […]