முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை ( எஸ்.டி.எவ்) உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார். இவர் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஒரே மகனாவார். இறக்கும்போது இவருக்கு வயது 80 ஆகும். எயர் சிலோன் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றிய ரவி ஜெயவர்த்தன, பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார். இதன்போதே அவர், 1984ஆம் ஆண்டு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினார். […]
இலங்கை செய்திகள்
மைத்திரி, ரணில், சம்பந்தன் திருமலையில் பத்திரகாளி அம்பாள் தரிசனம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலயத்தையும் சுற்றிப் பார்த்தனர்.
போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு பங்களிப்பு அவசியம்! – லால் விஜேநாயக்க வலியுறுத்து
“உள்ளக விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும்.” – இவ்வாறு புதிய அரசமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகச் செயற்பட்டவரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை […]
கேப்பாபிலவுக் காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும்! – சம்பந்தனிடம் இராணுவத் தளபதி உறுதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கேப்பாப்பிலவில் உள்ள 468 ஏக்கர் காணியை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்துள்ளனர். இராணுவத் தலைமையகமும் அதில் அமைந்துள்ளது. இந்தக் காணியை விடுவிக்குமாறு கோரி […]
காணிகளை உடன் விடுவிக்காவிடின் மக்களுடன் இணைந்து போராடுவோம்! – கேப்பாப்பிலவில்வைத்து மாவை எம்.பி. அரசுக்கு எச்சரிக்கை
“தொடர் அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் மக்கள் பெற்ற பலத்தைப் பிரயோகித்து விரைவில் காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இல்லாதுபோனால் நாங்களும் மக்களாகிய உங்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகவும், இராணுவத்துக்கு எதிராகவும் போராடுவோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கேப்பாப்பிலவில் உள்ள பூர்வீக நிலங்களான 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி […]
உறவுகளின் கண்ணீரைத் துடைக்க சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுப்போம்! – முல்லைத்தீவில் மாவை
“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரைத் துடிக்க சர்வதேச சமூத்திடமும், இலங்கை அரசிடமும் தன்னாலான அழுத்தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாவட்ட செயலத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்துக்கு நேற்று நேரில் சென்று ஆதரவைத் […]
திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் நன்கொடை
திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1தசம் 3 பில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது. திருகோணமலை துறைமுகத்தையும், துறைமுகத்தின் கடல்சார் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கும், துறைமுகத்தின் வழிகாட்டல் முறையை அபிவிருத்தி செய்வதற்குமான ஜப்பானிய உற்பத்திகளை இந்த கொடையின் மூலம் பெற முடியும். இக்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்துடன் […]
ஸ்ரீலங்காவுக்குள் ஐ.எஸ். ஊடுருவ முயற்சி; பாதுகாப்பு பிரிவை எச்சரித்த அமெரிக்கா
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயததாரிகள் ஈடுபடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதெவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்காவுக்கு அண்மையில் […]
மஹிந்தவின் மே தினத்தை காலிமுகத்திடலில் நடாத்த ஏற்பாடு செய்க-ரணில் ஆலோசனை
கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தை நடாத்துவதற்கு காலி முகத்திடலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இம்மே தினக் கூட்டத்துக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் பிரதமர் அந்த அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். கூட்டு எதிர்க் கட்சிக்கு காலி முகத்திடலின் முழுப் பகுதியும் தேவைப்பட்டாலும் அதனையும் வழங்குமாறும், அதற்குத் தேவையான பாதுகாப்பு, […]
யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு
யாழ் பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துணைவேந்தரின் எழுத்து மூல அறிக்கையை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் இன்றைய தினம் (01) காலையில் நிர்வாகத்தினர் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று வகுப்புத்தடையினை இரத்து செய்தனர். எதிர்வரும் திங்கட்கிழமை (3) வழமைபோல் விரிவுரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





