இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது – த.தே.கூ

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியம் அற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்ய முடியும் என கூறுவோருடன் பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கு தாம் தயார் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்

லொரி விபத்து : ஒருவர் பலி

உடபுஸ்ஸல்லாவையில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து பொகவந்தலாவையை நோக்கிப் பயணித்த லொரி ஒன்று இன்று காலை 11 மணியளவில் நானுஒயா ரதல்ல குறுக்கு பாதையில் விபத்துக்கள்ளானதில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பாதை ஒரத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட 7 பேர் காயம் மடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி 5 பேருடன் […]

தந்தை செல்வாவின் 119 ஆவது பிறந்ததினம் இன்று

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நினைவு கூறப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் துரையப்பபா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற […]

மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகள், வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு

மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடுவதாக வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட குரே மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். எனினும் ஆளுநருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிளுக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண […]

ஸ்ரீலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடிவு

  அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்றுஸ்ரீலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களையே இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்று இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியா முதலீடு செய்து ஸ்ரீலங்கா துறைமுக அதிகார […]

கிழக்கில் மதுபான உற்பத்திசாலை அமைக்க அனுமதிக்கப் போவதில்லை

எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமட் சூளுரைத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இளம் சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு தாம் ஒரு போதும் தயாரில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்ற […]

புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இளைஞர்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குறிப்பிடும் சம்பந்தன் இதற்கு வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதி உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் […]

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதிக்கு உதவியாக நிர்வாகப் பணிகளை இவர் ஆற்றுவார். இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார். […]

சர்வதேசம் தமிழர் பக்கம்! அச்சத்தில் மைத்திரி அரசு!! – சுமந்திரன் சுட்டுக்காட்டு

“சர்வதேச சமூகம் தமிழர்களுடன் இருப்பதைக் கண்டு மைத்திரி அரசு பயப்படுகின்றது. எனவே, சர்வதேச சமூகத்தை இன்னும் கூடுதலாக இறுக்கிக்கொண்டு நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதை விடுத்து சர்வதேச சமூகத்தினரை அடித்து விரட்டுகின்ற அடிமுட்டாள்தனமான காரியங்களில் தமிழர்கள் ஈடுபடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு […]

வத்துகாமத்தில் உடைந்து விழுந்தது பாடசாலைக் கூரை! – 26 மாணவர்கள் காயம்

கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள சிரிமல்வத்தை நவோதயப் பாடசாலையின் நேற்றுக் கூரை உடைந்து விழுந்ததில் 26 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 5 வகுப்பில் நடந்த இவ்விபத்தில் இயற்கைக்கடன் கழிக்கச் சென்ற ஒரு மாவணைத்தவிர ஏனைய அனைவரும் காயமடைந்து கண்டி வைத்திய சாலையின் 70ஆம் வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பாடசாலை வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தரம் 5 வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு கதறியபடியே […]