இலங்கை செய்திகள்

மஹிந்த அணியை எதிர்க்கட்சியாக ஏற்கமுடியாது! – சபையில் அநுரகுமார சுட்டிக்காட்டு

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த அணி உறுப்பினர்களை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த முன்னணியிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எதிரணிப் பக்கம் வந்து அமர்ந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாளையே வழங்குவதற்கு நாம் தயார்.” – இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க. நாடாளுமன்றத்தில் ஐ.நா. தீர்மான விவாதத்துக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த சர்ச்சையின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சி […]

ஐ.நா. தீர்மான விவாதத்தில் பங்கேற்க ஆவணங்கள் சகிதம் சபைக்கு வந்தார் சம்பந்தன்!

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த ஐ.நா. தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சதிகம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவைக்கு வந்திருந்தார். எனினும், விவாதம் நடைபெறாது தடைப்பட்டதால் அவர் மிகுந்த கவலையடைந்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. […]

திட்டமிட்ட அடிப்படையிலேயே ஐ.நா. விவாதத்தைக் குழப்பியடித்தது அரசு! – இராணுவத்தினருக்குப் பெரும் அநீதி என்கிறது மஹிந்த அணி

நாட்டுக்கும், இராணுவத்துக்கும் பெரும் பாதிப்பாக அமைந்துள்ள ஐ.நா. தீர்மானம் தொடர்பில், பொது எதிரணி கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் திட்டமிட்டு இடைநிறுத்தப்பட்டது எனவும், இது பொது எதிரணிக்கு மட்டுமன்றி இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்லாட்சி அரசால் இழைக்கப்பட் பெரும் அநீதியாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை […]

நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் – பிரதமர்

போட்டித்தன்மை வாய்ந்த, வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய ஏற்றுமதி மூலோபாய அபிவிருத்தி மாநாட்டில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வெளிநாட்டுக் கடனும், நிலுவைத் தொகையும் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களாகும். நாட்டுக்கு போதுமான அன்னிய செலாவணி கிடைப்பதில்லை. ஏற்றுமதி சுற்றுலா மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு என்பனவற்றின் மூலமே கூடுதலான அன்னிய […]

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வது ஏன்? – சசி தாரூர்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை வெளியீட்டு வழாவில் உரையாற்றிய போதே அவர் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் சீன அட்மிரல் செங் சிறிலங்காவுக்கு வந்தது தனியே வணிக நோக்கத்துக்காக அல்ல. சீனப் பேரரசின் கீழ் உலக ஒழுங்கைக் கொண்டு […]

வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு சபையை தலைமை தாங்கும் அதிகாரம்

வட மாகாண சபை அவை தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத நிலையில், சபையை தலைமை தாங்கும் அதிகாரம் வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார். […]

கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் தீவிரம்; 592 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலானது தற்போது ஸ்ரீலங்காவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், கிளிநொச்சியில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளமையை மாவட்ட சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் இதன் தாக்கமானது கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ள நாள் முதல், கடந்த 03 ஆம் திகதி வரையான 67 நாட்களுக்குள் கிளிநொச்சி […]

வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள்

வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடையாளங்கண்டு பட்டதாரிகளை நியமனம் செய்யுமாறு வடமாகாண ஆளுநருக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபை பேரவை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பட்டதாரிகள் கடந்த 39 நாட்களாக தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், மாகாண சபை […]

கால இழுத்தடிப்புக்கு 2 வருட அவகாசத்தை பயன்படுத்தக்கூடாது! – அரசிடம் வலியுறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை

* சர்வதேச பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.  * குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். * வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். * பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். * காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, கால இழுத்தடிப்புக்காக இலங்கை அரசு பயன்படுத்தக்கூடாது. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை […]

போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை: ராஜிதவின் கருத்தால் தமிழர்கள் அதிர்ச்சி!

“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது ‘போர்க்குற்றங்கள்’ இடம்பெற்றதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை” என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்று கருதக்கூடியயளவிலான மனித உரிமை மீறல்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நிகழ்த்தப்பட்டதற்கு நம்பகரமான சாட்சிகள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ள நிலையில் […]