64 சக்தி பீடங்களில் ஒன்றான திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அதிதியாக கலந்துகொண்டதோடு, ஆயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு, அம்பாளின் இரதத்தின் முன்பாக சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. கடந்த மாதம் 30ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த […]
இலங்கை செய்திகள்
சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்ரேலியா உதவி
சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு, அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து 15 மில்லியன் டொலர் உதவியை வழங்க அவுஸ்ரேலியா முன்வந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கான, வேலைத் திட்டத்தில் பெண்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதிஉதவி வழங்கப்படவுள்ளது. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த திட்டத்துக்கு அவுஸ்ரேலியா உதவும் […]
கொச்சி துறைமுகத்தில் சிறிலங்கா போர்க்கப்பல்கள்
சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்திருப்பதாக இந்திய கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்எல்என்எஸ் சமுத்ர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலும், எஸ்எல்என்எஸ் சுரணிமல என்ற ஏவுகணை விரைவுத் தாக்குதல் கப்பலுமே கொச்சி துறைமுகம் வந்துள்ளன. இந்தக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கப்டன் ஜெகத் பிரியசாந்த பிரேமரத்ன, கப்டன் றோகித அபேசிங்க மற்றும் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு […]
நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடக்கம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்து பிரதமர் கலந்துரையாடவுள்ளதுடன், பல முக்கிய பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மாரசிங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தப் […]
இறங்குதுறை இன்மையால் பூநகரி மீனவர்கள் சிரமம்
கிளிநொச்சி பூநகரி கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மையால் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பூநகரியின் கடற்தொழில் கிராமங்களான வலைப்பாடு, வேரவில், நாச்சிக்குடா, பள்ளிக்குடா, ஆகிய கரையோரப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் தொழிலை மேற்கொள்ளும் வகையில் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாதுள்ளது. மேலும் கடல்வற்றுக்காலங்களில் நீண்ட […]
வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் விசனம்
வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பெருமளவான பொது மக்கள் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக வருகை தந்துள்ளனர். வவுனியா தமிழ் […]
ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பு : விரைவில் 10,000 ரூபா வழங்க நடவடிக்கை
மலையக பெருந்தோட்டட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பவை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பாராளுமன்றத்தில் இணைந்து பேச்சுகள் நடத்தியதன் விளைவாக கொடுப்பவை 4000 ரூபாவால் அதிகரித்து விரைவில் 10, 000 ரூபாவை உதவி ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன தெரிவித்தபார். கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்னவு அதிகரிக்கபடவில்லை என்று பலர் பல்வேறு வகையிலும் குறிப்பாக முக புத்தகங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறுபட்ட […]
எங்கே எங்கள் உறவுகள்? – தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது அறவழிப் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது. கிளிநொச்சியில் 48 ஆவது நாளாகவும், வவுனியாவில் 44 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 32ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணியில் 25 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 35 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை போராட்டங்கள் தொடர்கின்றன. […]
தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்! – சபையில் சிவசக்தி எம்.பி. கடும் சீற்றம்
தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ள,போதிலும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழரை இன்று நடுவீதிக்கு அரசு கொண்டுவந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு […]
காணிகளில் இராணுவம்! வீதிகளில் தமிழ் மக்கள்!! – ஐ.நாவின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளரிடம் விக்கி சுட்டிக்காட்டு
“வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இராணுவத்தினர் இன்னமும் உள்ளனர். அந்த மக்களோ வீதிகளில் அமர்ந்திருந்து தமது சொந்த மண்ணை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த அவல நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “தமிழ் மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடக்கில் அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர […]





