இலங்கை செய்திகள்

மைத்திரி - ரணில்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம் யாழ்ப்­பா­ணத்தில் நாளை சனிக்­கி­ழமை நடை­பெறும் பொது நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அங்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ‘எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, […]

யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள்

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் திருமஞ்ச பவனி ஆரம்பமாகியது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருமஞ்சத்தின் வடம் தொட்டிழுத்தனர். அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் அலங்கார நாயகியாக ஸ்ரீதுர்க்காதேவி வலம் […]

ஐ.தே.க

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். கண்டிக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார். கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்தவாரம் வேட்பாளர் நியமனம் இடம்பெறும் என்றும் அதனை கட்சியின் மூத்த உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கூறினார். ஐ.தே.கவின் வேட்பாளராக […]

வாள்வெட்டுகுழு

யாழில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுகுழு!

யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோண்டாவில் அன்னுங்கை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிகளில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முகங்களை மூடியவாறு சென்றுள்ளனர். அவர்கள் வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் […]

கைது

ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது

ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு 178 பேர் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.         […]

Maithripala Sirisena

நாட்டை நேசிக்கும் மக்களே சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும்!

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காக சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக சவால்களை நோக்கும்போது மிக குறுகிய காலத்திற்குள் எவரும் எதிர்பார்க்காத மாபெரும் அதர பாதாளத்தில் நாடு விழுந்துவிடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி , அந்த சவாலிலிருந்து நாட்டை காப்பதற்கு […]

தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு?

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துமூலமான அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 10 முதல் டிசம்பர் 8 ஆம் திகதிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் […]

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி

வெற்றிப் பாதையில் மைத்திரி அணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சகல சவால்களையம் தாண்டி வந்துள்ளது. எனவே, இன்றிலிருந்து சு.க. வெற்றிப் பாதையிலேயே செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். “இலங்கையை இரு தாசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் சு.கவின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கப்படும்” என்று அவர் […]

ஜனாதிபதி

ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.                

கோத்தாபயவின் அறிவிப்பு

பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று (02) நடைபெற்ற முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், முற்போக்கு தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அடிப்படைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டின் பாதுகாப்பு […]