இலங்கை செய்திகள்

வீரகுமார திஸாநாயக்க

ஐ.தே.க. பிளவுப்படுத்த வேண்டிய தேவை சு.க.வுக்கில்லை

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெரிவித்த அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, ஐ.தே.க உறுப்பினர்களே தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது ‘ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தை பயன்படுத்தி […]

கவனஈர்ப்பு போராட்டம்

காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி […]

மனுவல் உதையச்சந்திரா

ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்

போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த ஓமந்தையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி முன்னெடுக்கப் படவுள்ள  போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் வேண்டு கோள் விடுத்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு […]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் மாலைத்தீவு பயணம் !

பிரதமர் மாலைத்தீவு பயணம் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.  

பேஸ்புக் காதல்

பேஸ்புக் காதல்- 18 வயது இளைஞன் பலி!

பேஸ்புக் காதல்- 18 வயது இளைஞன் பலி! திருகோணமலை-வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் காதலித்து வந்த இளைஞரொருவர் தமது பேஸ்புக் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளதாக வான் எல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான என். டபிள்யூ. அமில […]

மகிந்த

கோத்தபாய ராஜபக்ச ­ஆட்சிக்கு வந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம்-மகிந்த

கோத்தபாய ராஜபக்­ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை. எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை, மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்களது […]

கோத்தபாய ராஜபக்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கோத்தா ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை

கோத்தபாய ராஜபக்­ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை. எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை, மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்களது […]

சவேந்திர சில்வா

இராணுவத்தின் மனிதாபிமானத்தை தமிழர்கள் அறிவர்

இராணுவத்தின் மனிதாபிமானத்தை தமிழர்கள் அறிவர் இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான பணிகளை வடக்கிலுள்ள மக்கள் நன்கு அறிவார்கள். எவர் என்ன குற்றச்சாட்டை இராணுவம் மீது சுமத்தினாலும், உண்மையை வடக்கு மக்கள் அறிவார்கள் என தெரிவித்துள்ளார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா. நேற்று கண்டியில் தலதா மாளிகை, மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

திருட்டு வழியில் சஜித்தை ஜனாதிபதியாக்க மாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமான முறையில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மாற்ற மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். நேற்று (23) மாலை மாத்தறையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். பொதுமக்களின் பலத்தினுாடாக சரியான முறையான வழிமுறையில் ஆட்சி பீடம் ஏற்றுவோம் எனவும் அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் […]

ஜனாதிபதி

பிக்குகளால் எனக்கு தலையிடி மைத்திரி புலம்பல்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு சற்று முன்னர் முடிவடைந்தது. ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கமாக முக்கிய சந்திப்புக்களில் இரா.சம்பந்தனே அதிகம் பேசுவது வழக்கம். ஆனால் இன்று இரா.சம்பந்தன் பேசவில்லை. மாவை சேனாதிராசாவிடம், பிரச்சனைகளை பேசும்படி குறிப்பிட்டார். பின்னர் ஏனைய எம்.பிக்களும் பிரச்சனைகள் […]