கண்டி மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் நேற்றுமுதல் ஓரளவு சாதாரண நிலைக்குத் திருப்புள்ள போதிலும் தொடர்;ந்து ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அவர் மேலும் தெரிவித்தாவது, கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் ருக்மன் […]
இலங்கை செய்திகள்
கண்டியில் கலவரம் தணிந்தது- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!
கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (காலை) 10 மணிக்கு தளர்த்தப்பட்டுஇ மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று மாலை 4 மணிவரை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்இ தற்போது நிலைமை சுமூகமடைந்துள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ கடந்த 12 மணிநேரங்களில் எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இடம்பெறவில்லை […]
புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசுக்கு காட்டிக்கொடுத்தனர்
யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். இன்று நாம் வாழ்வதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி […]
தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த இரகசிய அறிக்கை
கண்டி தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தடுத்து நிறுத்த பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான இரகசிய அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதுடன், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்தெனிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் திகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மோதலை தடுக்க உத்தியோகபூர்வ […]
வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்
கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு அரசின் அசமந்த செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னின்று செயற்பட்டு இருக்கின்றார்கள். அதன்மூலம் அவர்கள் எதிர்பார்த்தது சக வாழ்வையும், சமாதானத்தையும் ஆகும். இன்று […]
இது சிங்கள பௌத்த நாடு முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் : ஞானசாரர்
இது சிங்கள பௌத்த நாடு என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றால்போல் வாழவும் வேண்டும். அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் திரும்ப கொலை செய்வோம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு இன்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிங்களம்,முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் சமாதானமாக இருக்க […]
நாடு முழுவது 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் பிரகடனம் : ஜனாதிபதி உத்தரவு
கண்டி, திகன – தெல்தெனி பிரதேசத்தில் ஏற்படடுள்ள பதற்றமான நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடு முழுவது அவசகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.
கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் தொடர்கிறது பதற்றம்
கண்டி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. எனினும், நேற்றிரவும் சில இடங்களில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், […]
கண்டியில் வன்முறை களத்தில் இராணுவம்
கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன. சிறப்பு அதிரடிப்படையினரும்இ காவல்துறையினரும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வியடைந்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் இராணுவத்தின் உதவி கோரப்பட்டது. காவல்துறையினால் உதவி கோரப்பட்டதை அடுத்து உடனடியாக இராணுவத்தினரை அங்கு அனுப்பி வைத்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் […]
ரணிலின் இடத்திற்கு பொன்சேகாவை நியமிப்பதில் ஐ.தே.க மீண்டும் ஆர்வம்
சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்கு பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகாவை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆர்வம் காட்டிவருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாகவே யோசனையை முன்வைத்திருந்தது. எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார். ஆனால்இ தற்போது மீண்டும் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி […]





