இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணி புதிய திட்டமிடல் குழுவொன்றை நியமித்துள்ளது. பொது எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழுவொன்றே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கெதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக கூட்டு எதிர்கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புடன் பேச்சுகளை […]

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு விரைவில்

கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் முதற்கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின்பேரில், கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க […]

ஜனாதிபதியாக களமிறங்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை தூக்கியெறிவேன்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விஷேட நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின்மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ள ஒருவரும், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஒருவரும், இராணுவத்தினரை பாதுகாக்கும் ஒருவரும், நாட்டில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒருவரும், சுயநலமற்ற தூய்மையான அரசியலில் […]

மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் என்ன நடக்கிறது! சர்வதேசத்திற்கு மைத்திரி சொன்ன தகவல்

இலங்கையில் சமாதானமான சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த போது சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள், ஆணையாளர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறையான நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஆரம்ப காரணமாக செயற்பட்டவர்களை கைது […]

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்த வலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை ஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் பேஸ்புக், […]

கண்டியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த இராணுவ தளபதி

கண்டி மாவட்டத்தில் திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய போன்ற இடங்களில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டள்ளது. இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக நேற்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில் கண்டி பள்ளிவாசலின் மௌலவி மற்றும் அப்பிரதேச முஸ்லிம் மக்களை சந்தித்து உரையாடினார். சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ […]

கண்டி வன்முறை யார் காரணம்? – எதிர்க்கட்சித் தலைவர்

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரே கண்டி திகன சம்பவம் வன்முறையாகவும் கலவரமாகவும் மாற பிரதான காரணம் எனவும் அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டு இந்த தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்டி, தெல்தெனிய சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை […]

இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின்; இராஜதந்திரிகளை சந்தித்து சமகால நிலவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளார். எனினும்,இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவும் வெளியாகவில்லை. அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களின் பின்னணியில், […]

வடக்கு ரயில் பாதை புனரமைப்பு துரிதப்படுத்த முகாமைத்துவ பிரிவு

ரயில் குறுக்கு பாதையில் பாதுகாப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கும் மற்றும் வடக்கு ரயில் பாதையை புனரமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தும் திட்ட முகாமைத்துவ பிரிவுவொன்று அமைக்கப்படவுள்ளது. இலங்கையின் ரயில் வீதி பாதை வலைப்பின்னலின் நீளம் 1450 கிலோமீற்றர்களாகும். அத்தோடு இதில் 1337 குறுக்கு ரயில் பாதை உண்டு. இவற்றில் 520 ரயில் குறுக்குபாதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மேலும் 400 ரயில் குறுக்கு பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்பை […]

நல்லிணக்கம் பாதிக்கப்படின் நாடு அழிவை எதிர்நோக்கும் ; மகாநாயக்க தேரர் எச்சரிக்கை

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுமாயின், நாடு பாரிய அழிவை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று (புதன்கிழமை) தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையலான இந்த வன்முறைக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள […]