இலங்கை செய்திகள்

அனந்தி சசிதரன் அம்பலப்படுத்தி உண்மை : டக்ளஸ் வரவேற்பு

தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியதாக வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தத. இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு […]

இரண்டாம் கட்ட அமைச்சரவை மாற்றம் : சு.கவுக்குள் இழுபறி

அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சியின் உள்ளகத் தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த தோல்வியின் பின்னர் கொழும்பு அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அரசியல் பதற்ற நிலையைத் தனிக்க அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதாக தேசிய அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. எனினும் முதலாம் கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. […]

ஜப்பான் செல்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கின்ற ஒரு முயற்சியாக சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் உறுதிப்படுத்தவுள்ளது. ஜப்பானில் இருந்து வெளியாகும் பத்திரிகையொன்று தகவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிடோ […]

நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில்இ இரண்டு குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய […]

யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ். கொக்குவில் – பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த வீட்டின் கதவையும் கோடரியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொன்சேகா

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்?

சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த அமைச்சு பதவி வழங்கப்படும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ள […]

தமிழர்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டில் மஹிந்த!

காணாமல் போனோர் பணியகத்திற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். காணாமல் போனார் பணியகத்திற்காக ஆணையாளர் நியமிக்கப்பட்டமையின் ஊடாக அரசாங்கம் காட்டிகொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் காட்டி கொடுப்பு வேலைத்திட்டங்கள் மீண்டும் இதன் ஊடாக தெளிவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் […]

பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள 682ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறுவதற்கு மாற்று காணிகள் வேண்டும் என்றும், அவற்றை எழுத்தால் எழுதி வழங்கவேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஒருவர் கோரிக்கை […]

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை தவிர அனைத்து பிரதேசங்களிலும் மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில பிரதேசங்களில் 100 […]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் அவசர சிங்கப்பூர் விஜயம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அவசர சிங்கப்பூர் விஜயம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருக்கும் இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேட்டு அறிந்து கொள்ளலாம் என குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகலகந்தே சுதத்த தேரர் கூறியுள்ளார். அத்துடன், பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படும் விதம் […]