இலங்கை செய்திகள்

மே 18ஆம் திகதி தமிழின அழிப்பு தினமாக பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18ஆம் திகதி தமிழ் இன அழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது, சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் முன்மொழிந்தார்.

மஹிந்தவினால் புகழ்பெறும் நல்லாட்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்து பாலங்களே இவ்வாறு நாளை திறந்து வைக்கப்படவுள்ளன. ஜப்பானின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 2014ஆம் ஆண்டு, 7 பில்லியன் ரூபாய் மதிப்புடைய இந்த திட்டம், மஹிந்த அரசாங்கத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. குறித்த பாலங்களுக்கான நிர்மாணப் பணிகள் […]

Ranil

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற இவரா காரணம்?

அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீடு காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்த பிரச்சினையான நிலைமையில் அந்த கட்சியை சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்களை இலகுவாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பான நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தது. வெற்றி நெருங்கி வரும் வேளையில், அமைச்சர் […]

குற்றவாளிகள் தப்புகின்றனர்: நாடாளுமன்றில் சுமந்திரன் சுட்டிக்காட்டு

குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தில் […]

Maithripala Sirisena

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது கொள்கை விளக்க அறிக்கையை இரண்டாவது தடவையாக நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நடைபெற்று வரும் ஆட்சியின் 8வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அவர் முன்வைத்த கொள்கை விளக்க அறிக்கைக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக இந்த ஆட்சியின் எஞ்சிய இரண்டு வருட காலத்துக்கான கொள்கை விளக்க அறிக்கையை அவர் முன்வைத்தார். ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் எதனையும் உருப்படியாக நிறைவேற்றியிருக்காத நிலையில் அவரது இந்தக் […]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனர்த்தம்! ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உபகரணங்கள் தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. விமான […]

மீண்டும் சிதறும் முள்ளிவாய்க்கால்! தவிர்ப்பார்களா ஈழத்தமிழர்கள்?

உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 18, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. தமிழர்கள் விடுதலை பெறவும், உரிமைகளை அடையவும், தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் யுத்தத்தில் செலவிட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் […]

ரணில் என நினைத்து மஹிந்தவை தாக்க முற்பட்ட மக்கள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நினைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாகனம் சுற்றி வளைக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரணில் என நினைத்து தனது வாகனத்தை பொது மக்கள் தாக்க முயற்சித்தாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். காலி சமனல மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இந்த தகவலை வெளியிட்டார். இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட […]

ஜனாதிபதி

நாடாளுமன்றில் வைத்து ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் எட்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்துகையில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் […]

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ஆதாரத்துடன் கூறுகிறார் நெடுமாறன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் […]