தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இந்தப் பேராபத்தைக் கருத்திற் கொண்டு – கரிசனையில் எடுத்து இந்திய அரசு தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தியப் பத்திரிகையாளர் தி.ராமகிருஸ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா […]
இலங்கை செய்திகள்
நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்.
ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்குட் பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்து ரைகளை விரைந்து – சபையின் ஆயுள் காலத் துக்குள் – எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் திகதிக் குள் நிறைவேற்றுமாறு எதிர்வரும் வியாழக் கிழமை இடம்பெறவுள்ள மாகாண சபை அமர் வில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. நிதி மோசடிகள், அதிகார முறைகேடுகள் உள் ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காலத்துக்குக் […]
பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!!
பால்மா ஒரு கிலோ 75 ரூபாவாலும், சமையல் எரிவாயு 245 ரூபாவாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவருகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள காரணத்தால், பால்மா மற்றும் காஸ் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கும்படி வாழ்க்கைச் செலவு […]
வடக்கு முதல்வரின் புதிய முடிவு
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் அவர் […]
தற்காலிக வீடுகள் கூட இல்லாத கோயில்காடு மக்கள்!!
கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக வீடுகள் கூட இன்றி மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக இத்தாவில் கோயில்காடு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமமே இத்தாவில் கிராமம். குறித்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதியே கோயில்காடு பகுதி. குறித்த பகுதியில் பிரதேச செயலகத்தால் அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு காணி இல்லாத மக்கள் […]
ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் […]
முல்லைத்தீவில் மொழிப் பிரச்சினையால் நோயாளர் அசௌகரியம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கடமையாற்றுவதால், நோயாளர்கள் மொழிப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் பலர் இங்கு கடமையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை மருத்துவமனையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குண சீலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அமைச்சருக்கு இந்த […]
ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி
இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள ஹொரானா நகரில் இருக்கும் ரப்பர் தொழற்சாலையில் பணியாளர் ஒருவர் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு அவரை தாக்கியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை அந்த தொட்டியில் இருந்து மீட்க உள்ளே […]
யாழ். பல்கலையில் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி
யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னை பூபதிக்கு சுடரேற்றி, மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





