இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் புலியை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிளிநொச்சியில் கிராமம் ஒன்றுக்குள் வந்த சிறுத்தை புலி கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சட்டத்தை செயற்படுத்தி, பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்து […]

இவ்வருட சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு திணைக்களத்தினதும் பணிகள் மிகவும் சிரமமின்றி அமையும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வி. குணதிலக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர […]

வவுனியாவில் கிணற்றில் மிதந்த இளைஞனின் சடலம்

இச்சம்பவம் நேற்று காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அனோஜன் (டிலக்சன்) இளைஞனே மேற்படி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் மகாறம்பைகுளம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவரென்றும் நேற்று மாலை வேப்பங்குளம் பகுதியில் உள்ள அவர்கட்கு சொந்தமான காணி ஒன்றை பார்வையிட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞனே சடலமாக […]

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் […]

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்

“மக்கள் போராட்டம் வெடிக்கும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவ்வப்போது கூறுவது உண்டு. நிலமீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், நுண்நிதிக் கடனைத் தடை செய்யக் கோரும் போராட்டம் எனப் பல போராட்டங்கள் நாளாந்தம் வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சில, வருடத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில், தமிழர் பிரதேசங்களின் கடல் பிரதேசத்தைப் படையினரின் […]

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – ஐந்து பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடந்த திருவிழாவின் போது, இளைஞனர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்த போதும், திட்டமிட்டு சுட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய […]

வவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு

இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 22.05.2018 அன்று சகோதரிகளில் 8 வயதான தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை மற்றைய சகோதரியான 7வயதான சரனிக்கா எனும் சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]

அரசாங்கம் மீது மகிந்த கடும் குற்றச்சாட்டு

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். வரகாபொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்ன் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றியும், தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தவே முயற்சிக்கின்றது. எனினும், நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் […]

க.பொ.த சாதாரணதரத்திற்கான பாடங்களை 6ஆக குறைக்கத் திட்டம்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத்திற்கான பாடங்களை 6 ஆக குறைப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தினூடாக இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்கு 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

இன்று காலை புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் துவான் தில்கான் (வயது 24) என்ற இளைஞர் ஆற்றுக்கு குளிக்க சென்ற பின்னர் சடலமாக மீட்கபட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. குறித்த இளைஞன் இன்று காலையில் தனது சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். சகோதரர்கள் இருவரும் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால். உடனடியாக குளித்து விட்டு சென்றுள்ளனர். பின் இவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய […]