இலங்கை செய்திகள்

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே!

இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே! சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்கள் கருத்து அமைந்துள்ளது. உங்கள் கூற்று சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் அல்லவா என்று வினவியுள்ளனர். அதற்கு பதலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உண்மையை சில தருணங்களில் கூறாது விடுவது பொருத்தமானதாகும். சில தருணங்களில் அதனை இடித்துக் கூற வேண்டியுள்ளது. உண்மையானது சில தருணங்களில் வெளிக்கொண்டுவரப்படாது நம்மால் மௌனம் […]

யாழில் பிரபாகரன் வருவார் என மக்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு!

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது. சங்கானை பிரதேச செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

பிரபாகரன் அன்று சொன்னது இன்று புரிகின்றது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கூறியது இன்று புரிந்துகொள்ள முடிகின்றதாக பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர். “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே. பிரபாகரனுக்கு அன்று புரிந்த விடயம், இப்போதே எமக்கு புரிந்துள்ளது. அரசியலில் […]

என்னுடைய தேர்தல் தொகுதியில் இப்படி ஒரு கொடூரமா? அமைச்சர் கவலை

என்னுடைய தேர்தல் தொகுதியான யாழ். சுழிபுரத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கோரமான ஒன்று என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ் – தென்மராட்சி, தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் 30 வருட யுத்தத்தின் பின்னர் நேற்று உப்பு உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். […]

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், தொட்டியடிப்பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. தொட்டியடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் பிரதேசவாசிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். […]

வட மாகாணத்தில் அதிரடி வேட்டை! அடுத்த என்ன?

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – பேராறு பகுதியில் 15 கிலோ கிளைமோர் குண்டு உட்பட சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் – பேராறு வீதியில் குறித்த வெடி பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குறித்த சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியிலிருந்து தப்பிச் சென்ற மற்றுமொருவரைத் தேடி வட மாகாணத்தில் […]

சிங்கள இனம் அழிகிறது! கவலைப்படுகிறார் மகிந்த

நாட்டில் சிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போகிறது. மக்கள் தொகை குறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் தொகை வீழ்ச்சியடையும். ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.

கொழும்பை வந்தடைந்த நார்வேயின் நன்சன் கப்பல்

இந்து சமுத்திர கடற்பிராந்தியத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உயர்தொழில் நுட்பங்களைக் கொண்ட நோர்வேயின் டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது. நோர்வேயின் பிரசித்திபெற்ற ஆய்வுக்கப்பலான டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் கடல்வள ஆய்வு, மீன்வள ஆய்வு மற்றும் கடல் மாசாக்கல் காரணிகள் தொடர்பான ஆராய்ச்சி என்பவற்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இக்கப்பல் எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் […]

ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களையும் கனக்க செய்த நிஜ காதல்! பல கண்களில் கண்ணீர்

அண்மையில் கோர விபத்தில் உயிரிழந்த இளைஞனை திருமணம் செய்யப் போவதாக காயப்பட்டுள்ள காதலி கதறும் காட்சி ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களை கனக்கச் செய்துள்ளது. கடந்த வாரம் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் காதலன் உயிரிழந்த நிலையில், காதலி படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த காதலனின் இறுதி கிரியைகள் நேற்று நடைபெற்றன. உயிரிழந்த காதலனின் சடலத்தை பார்வையிட்ட காதலி கதறி கண்ணீர் விடும் போது கூறிய வார்த்தைகள் […]

யாழில் 500 பேருக்கும் அதிகமானோர் அடையாள உண்ணாவிரதத்தில் குதிப்பு

தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 7.30 மணியளவில் ஒன்றுகூடிய ஊழியர்கள் தமது அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட யாழ். அஞ்சல் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.