அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ‘எச்-1பி’ விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) அங்கேயே பணியாற்றுவதற்கு வசதியாக எச்-4 விசா, கடந்த ஒபாமா ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அமெரிக்காவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த வெளிநாட்டினருக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதுவும் இந்தியர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக […]
Author: குமார்
வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளைப் போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் […]
அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல- தம்பித்துரை
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தான் முடிவு எடுக்கும். நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அம்மா எப்படி கட்சியை நடத்தினார்கள், எப்படி தனித்துவத்தை காண்பித்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனிக்கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் […]
வாயை திறக்காதீங்க!: பிரதமர் மோடி உத்தரவு
புதுடில்லி: ”தேவை இல்லாத விஷயங்களை பேச வேண்டாம்,” என, பா.ஜ.,வை சேர்ந்த சர்ச்சைக்குரிய தலைவர்களுக்கு, பிரதமர், நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சர்ச்சையாக பேசுவதால், ஊடகங்களுக்கு தேவை யான, மசாலாக்களை நாம் அள்ளித் தருகிறோம். சிறந்த சமூக விஞ்ஞானிகள்,நிபுணர்களாக நினைத்து, கேமராக்கள் முன், நீங்கள் பேசும் வார்த்தைகள், கடும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன. இதனால், கட்சியின் புகழுக்கு பாதிப்புஏற்படுகிறது. இத்தகைய பேச்சுக்களை, பா.ஜ., – எம்.பி.,க்கள், தலைவர்கள் தவிர்க்க வேண்டும். ஊடகங்களில், அங்கீகாரம் […]
சீன மாணவர்கள் இந்தியும் இந்திய மாணவர்கள் மாண்டரின் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் – சுஷ்மா சுவராஜ்
‘ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு’ நாடுகளின் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பீஜிங்கில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இந்தநிலையில்,பீஜிங்கில் நடைபெற்ற இந்திய சீனாவிற்கு இடையே ஹிந்தி பங்களிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: […]
கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள்
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கிய கொக்கி […]
சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் 1950 […]
ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா 10 தங்க பதக்கங்களை வென்றது
தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்; 10 தங்க பதக்கங்களை வென்றது இந்தியா நேபாள நாட்டில் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21ந்தேதி தொடங்கின. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின. இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் […]
‘தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது’
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ‘யூ-டியூப்’ மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: நமது அரசியல் ஆக்கபூர்வமான செயலை நோக்கியா? அல்லது அதிகாரத்தை மட்டும் நோக்கியா? பதில்: அதிகாரத்தை மட்டும் நோக்கி செல்வது ஒரு அரசன் செய்யும் வேலை. அதிகாரத்தை மட்டும் நோக்கி சென்று என்ன செய்வது? அது மக்களுக்காக செய்யும் விஷயம் கிடையாது. நல்ல […]
நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் பலர் பலியாகி உள்ளனர். சுமார் 25 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில், அங்கு தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் […]





