Wednesday , March 27 2024
Home / குமார் (page 5)

குமார்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத …

Read More »

ஈரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை

2015 ஆம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.அவை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பங்கு ஆகியவை அடங்கிய புதிய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அதற்கான காலக்கெடு மே 12 எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2015ஆம் அண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏமன், …

Read More »

கச்சா எண்ணெய் விலை 20% வரை உயரும்: உலக வங்கி

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை 20 சதவீதம் வரை உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் எண்ணெய் வழங்கலில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலர் வரை உயரும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Read More »

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் …

Read More »

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ‘எச்-1பி’ விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) அங்கேயே பணியாற்றுவதற்கு வசதியாக எச்-4 விசா, கடந்த ஒபாமா ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அமெரிக்காவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த வெளிநாட்டினருக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதுவும் இந்தியர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக …

Read More »

வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளைப் போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் …

Read More »

அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல- தம்பித்துரை

பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தான் முடிவு எடுக்கும். நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அம்மா எப்படி கட்சியை நடத்தினார்கள், எப்படி தனித்துவத்தை காண்பித்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனிக்கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் …

Read More »

வாயை திறக்காதீங்க!: பிரதமர் மோடி உத்தரவு

புதுடில்லி: ”தேவை இல்லாத விஷயங்களை பேச வேண்டாம்,” என, பா.ஜ.,வை சேர்ந்த சர்ச்சைக்குரிய தலைவர்களுக்கு, பிரதமர், நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சர்ச்சையாக பேசுவதால், ஊடகங்களுக்கு தேவை யான, மசாலாக்களை நாம் அள்ளித் தருகிறோம். சிறந்த சமூக விஞ்ஞானிகள்,நிபுணர்களாக நினைத்து, கேமராக்கள் முன், நீங்கள் பேசும் வார்த்தைகள், கடும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன. இதனால், கட்சியின் புகழுக்கு பாதிப்புஏற்படுகிறது. இத்தகைய பேச்சுக்களை, பா.ஜ., – எம்.பி.,க்கள், தலைவர்கள் தவிர்க்க வேண்டும். ஊடகங்களில், அங்கீகாரம் …

Read More »

சீன மாணவர்கள் இந்தியும் இந்திய மாணவர்கள் மாண்டரின் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் – சுஷ்மா சுவராஜ்

‘ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு’ நாடுகளின் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பீஜிங்கில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இந்தநிலையில்,பீஜிங்கில் நடைபெற்ற இந்திய சீனாவிற்கு இடையே ஹிந்தி பங்களிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: …

Read More »

கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள்

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கிய கொக்கி …

Read More »