Monday , June 17 2024
Home / குமார் (page 3)

குமார்

ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி கிராம தன்னாட்சி திட்டத்தின்படி, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களுக்கு சென்றடைகிறதா? என ஆய்வு செய்யும்படி மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், திக்கணங்கோடுபுதூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தார். நாகர்கோவிலை அடுத்த மேலகருப்பு கோட்டை கிராமத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சென்று ஆய்வு நடத்தினார். வீதிகள் தோறும் சென்று மக்களை சந்தித்து …

Read More »

வேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை – மின்தடையால் பொதுமக்கள் அவதி

வேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கோடைவெயில் கொளுத்தி வருகிறது. அதிக பட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி 108 டிகிரியும், இந்த மாதம் (மே) 1-ந்தேதி 107 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் …

Read More »

மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி பகுதியில் நஜிபுனிஷா என்பவருக்கு சொந்தமான 2 மாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இதே கட்டிடத்தில் மர இழைப்பகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த 2 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென குலுங்கியது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் 30-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ …

Read More »

இன்றும் நாளையும் ஐதராபாத்தில் பயங்கர அனல் காற்று வீசும்- தெலுங்கானா அரசு எச்சரிக்கை

ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் அதிக வெயில் கொளுத்துகிறது. ஐதராபாத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் ஐதராபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் மேலும் அதிகமாக வெயில் கொளுத்தும் என்றும், பயங்கர அனல் காற்று வீசும் என்றும் தெலுங்கானா அரசு எச்சரித்துள்ளது. இந்த 2 நாட்களிலும் 108 டிகிரி …

Read More »

வட மாநிலங்களை புரட்டியெடுத்த புழுதி புயல் – உ.பி.யில் 42 பேர் பரிதாப பலி

வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் புரட்டி எடுத்தது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புழுதி புயலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஏராளாமானோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஆக்ரா …

Read More »

தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு

3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள் ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 …

Read More »

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி …

Read More »

இடி மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம் – ஒடிசா அரசு அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டுமே மின்னல் தாக்கியதில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக புவனேஸ்வரில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலர் ஏ.பி.பதி கூறுகையில், ‘மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கக் கூடிய தொழில்நுட்பம் சில மாநிலங்களில் நல்ல பலனளித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் நமது மாநிலத்திற்கான பயன்பாடு மற்றும் பொருந்தும் தன்மை குறித்து ஆய்வு …

Read More »

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

.திருச்செந்துார் முருகன் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. கடற்கரையை ஒட்டி இருக்கும் கோவிலில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, கோடை விடுமுறை என்பதால், கூட்டம் அதிகரித்துள்ளது.நேற்று பகல், 11:00 மணியளவில், திருச்செந்துார் கடல் திடீரென உள்வாங்கியது. 50 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதால், பாறைகள் வெளியே தெரிந்தன. கடலில் குளித்து கொண்டிருந்த பக்தர்கள் வியப்படைந்தனர். மாலை, 3:00 மணியளவில், கடல் பழைய …

Read More »

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடி

மறைமுக வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மாதந்தோறும் அதன் வசூல் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி வசூல் ஆகியுள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும். கடந்த மார்ச் …

Read More »