காரைக்குடியில் மணிசங்கர் ஐயர், திருமாவளவன் ஆகியோரை கண்டித்து பாஜகவின் நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேஷ்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என கொந்தளித்துள்ளார். கடந்த 6-ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடியது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தியது அக்கட்சி. அதில் பேசிய திருமாவளவன், […]
Author: தமிழவன்
ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த […]
“தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும்
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு […]
மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து.!
புகையிரத சேவை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவச போக்குவரத்து சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுமானால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவசமாகச் செல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் […]
மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து!
ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவரும் சித்தியடைந்து எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாழ்த்தியுள்ளார். ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: இம்முறை 5ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங் களில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 விண்ணப்பதாரி கள் தோற்றவுள்ளனர். பரீட்சை சட்டதிட்டங்க ளுக்கு உட்பட்டு அனைத்து […]
யாழ்ப்பாணத்தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டாவது சுயேச்சைக் குழு நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தி வருகின்றன. யாழ்ப்பாணத்தில், சங்கானை பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு சுயேச்சைக்குழு கட்டுப் பணம் செலுத்தியிருந்தது. இந்த நிலையில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடுவதற்கு சுயேச்சைக் குழு நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. மேலும், சாவகச்சேரி நகர சபைத் […]
தேர்தல் தொடர்பாக முதல் முறைப்பாடு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான முதலாவது தேர்தல் முறைப்பாடு பொலிஸாருக்கு நேற்றுப் பதிவாகியுள்ளது. ஆரச்சிகட்டுவ பொலிஸ் பிரிவில் இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். பெயர் பதாகை ஒன்றுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே அந்த முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
ஆட்சி அதிகாரம் உங்க கையில இருந்தா நீங்க யார வேணும்னாலும் அடிக்கலாமா?
ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தடுத்த தேர்தல் அதிகாரியை அந்த அதிமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆர்கே நகருக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் […]
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு 16-ந் தேதி பதவி ஏற்கிறார்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார். இதனால், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 4-ந் தேதி […]
கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி
குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சின்னத்துறை பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களை முதல் அமைச்சர் சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று முதல் அமைச்சர் பழனிச்சாமி […]





