Author: பார்த்தீபன்

மஹிந்தவின் சகாக்கள் திருடிய பணத்தை மீட்க சர்வதேச உதவி! – ஐ.தே.க. தெரிவிப்பு

மஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் திருடிய பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச உதவிகள் கோரப்பட்டிருக்கின்றன என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஊழல், மோசடியால் இந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மக்கள் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து எம்மிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதும், ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் […]

இப்படியே சென்றால் இராணுவப் புரட்சிதான்! – அரசுக்கு டியூ எச்சரிக்கை

இந்த அரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சி ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி உருவானது. மஹிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. […]

மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்! – மஹிந்த அணி திட்டவட்டம்

“மீதொட்டமுல்ல குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அரசே பொறுப்புகூற வேண்டும். அனர்த்தம் என்ற போர்வைக்குள் இதனைத் தள்ளிவிடாமல் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “குப்பைமேடு சரிந்து விழுந்து அதிகளவானோர் உயிரிழந்த சம்பவம் இலங்கையிலேயே […]

காணிப் பிரச்சினையைத் தீர்ப்போர் எங்களையும் திரும்பிப் பாருங்கள்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

“காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் நீங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தர முயற்சியுங்கள்.” – இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உருக்கமாக வேண்டுகோள் முன்வைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களின் உறவுகள் தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அந்தப் போராட்டங்கள் இரு மாதங்களை எட்டவுள்ள நிலையில் இதுவரை எந்தவிதமான தீர்வுகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. “இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதற்காக […]

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக அஹிம்சை வழியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வீரச்சாவடைந்த நாட்டுப்பற்றாளர் – ஈகச்சுடர் – தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நேற்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. அன்னை பூபதியின் கல்லறை அமைந்துள்ள மட்டக்களப்பு, நாவலடி கடற்கரை நினைவு வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுதின […]

தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம்! – மட்டக்களப்பில் இன்று உணர்வெழுச்சி நிகழ்வு

நாட்டுப்பற்றாளர் – ஈகச்சுடர் – தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் பூபதி என்ற இயற்பெயருடன் வந்துதித்த அன்னை பூபதி, தமிழீழ மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவடைந்தார். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே 19.03.1988 இல் இருந்து […]

மஹிந்தவின் ஊழல், மோசடிகள்: – 3 விசாரணை அறிக்கைகள் மைத்திரியிடம் இவ்வாரம் கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கைகள் மூன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடனும் அவரது குடும்பத்தினருடனும் நேரடியாகத் தொடர்புடையதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பான அறிக்கைகளே ஒப்படைக்கப்படவுள்ளன. மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு பல்வேறு மோசடிகள் […]

வாழ்வுக்கான போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே! – மனைவி, மகள், மருமகன், பேர்த்தியை இழந்து தவிக்கும் முதியவர்

“ஐயோ, எனது முழுக் குடும்பமுமே குப்பைமேட்டுக்குள் புதைந்து சிதைந்துபோயுள்ளது. பேரன் மட்டுமே உயிருடன் இருக்கின்றான். வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எனது போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே…” – இவ்வாறு கண்ணீர்மல்க கருத்து வெளியிட்டுள்ளார் மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட என்.கீர்த்திரத்ன. மீதொட்டமுல்லயில் குப்பைகொட்ட வேண்டாமென முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை எல்லாம் இவரே தலைமையேற்று நடத்தியிருந்தார். இதனால், பொலிஸாரின் கொட்டன், பொல்லுத் தாக்குதல், கண்ணீர்ப் புகைகுண்டுத் தாக்குதல்ஆகியவற்றுக்குள் உள்ளாகியிருந்தார். எவ்வளவுதான் நெருக்கடிகள் […]

மீதொட்டமுல்லயில் தொடர்கிறது மீட்புப் பணி! – 31 சடலங்கள் இதுவரை மீட்பு

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. அத்துடன், அனர்த்ததால் ஏற்பட்ட சொத்து இழப்பீடு குறித்த மதிப்பீட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. கள ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை மொத்தமாக 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 10 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 30 பேர் காணாமல்போயுள்ளனர் என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த குறித்த நிலையில் அத்தொகை 10 ஆகக் […]

மீதொட்டமுல்ல அனர்த்தம்: ரணிலிடம் வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவனும், வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டொங்கும் தெரிவித்துள்ளனர். இந்த உணர்வுபூர்வமான சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும், அரசும் தமது உள்ளங்களால் இலங்கையுடன் ஒன்றாக இணைந்திருப்பதாக வியட்நாம் ஜனாதிபதியும், கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று செவ்வாய்க்கிழமை […]