வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் தொடர் அறவழிப் போராட்டம் தீர்வின்றி இன்று தொடர்கின்றது. அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி போராட்டம் தொடரும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று 49 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் தொடர்கின்றது. அவ்வாறே வவுனியாவில் 45ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 33ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் […]
Author: பார்த்தீபன்
அரசு ஏமாற்ற முற்பட்டால் சர்வதேசம் கைகொடுக்கும்! – நம்பிக்கை இழக்கவில்லை என்கிறார் மாவை எம்.பி.
“நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை வைத்து நாம் செயற்பட்டிருக்கின்றோம். இன்னும் நாம் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை. நாங்கள் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த அரசு எம்மை ஏமாற்றுமாயின் எங்களது அடுத்தகட்ட முடிவுகளைச் சர்வதேசம் ஆதரிக்கும். நாம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்துடன் பேசித்தான் தீர்மானிக்க முடியும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். […]
அமைச்சரவை மாற்றங்களுடன் சு.க. அரசை அமைத்தே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்
எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்குத் தான் உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சக்திமிக்க எதிர்காலமொன்றை உருவாக்குவதற்காகத் தற்போதைய அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தனது அரசின் மீது வீசப்பட்டு வரும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களையும், அபத்தமான விமர்சனங்களையும் எதிர்கொண்டு சிறப்பானதொரு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தங்கள் மீது நம்பிக்கை […]
மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாப மரணம்! – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் வீட்டில் இடம்பெற்ற அலங்கார வேலையின்போது மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் சுன்னாகம் மத்தி ஜே198 கிரமசேவகர் பிரிவிவைச் சேர்ந்த குணதாசன் கிறிஸ்ரி யோசப் (வயது – 42), கி.சுகந்தினி (வயது – 37) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இப்பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் விக்கிரக பவனி இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்லப்படுகின்றது. அந்தவகையில் […]
போர்க்குற்றம் இடம்பெறவில்லை; விசாரணை தேவையில்லை: யாழில் தான் தெரிவித்ததாக வெளியான தகவலை நிராகரித்தார் ராஜித!
போர்க்குற்றங்களோ, மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று யாழ்பாணத்தில் வைத்து தான் தெரிவித்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார். 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே தமிழ் மக்களுக்காகத் தான் குரல் கொடுத்து வருகின்றார் என்றும், தனது நிலைப்பாடு என்னவென்பது தமிழ் மக்களுக்குத் தெரியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன், […]
எங்கே எங்கள் உறவுகள்? – தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது அறவழிப் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது. கிளிநொச்சியில் 48 ஆவது நாளாகவும், வவுனியாவில் 44 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 32ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணியில் 25 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 35 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை போராட்டங்கள் தொடர்கின்றன. […]
தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்! – சபையில் சிவசக்தி எம்.பி. கடும் சீற்றம்
தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ள,போதிலும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழரை இன்று நடுவீதிக்கு அரசு கொண்டுவந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு […]
காணிகளில் இராணுவம்! வீதிகளில் தமிழ் மக்கள்!! – ஐ.நாவின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளரிடம் விக்கி சுட்டிக்காட்டு
“வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இராணுவத்தினர் இன்னமும் உள்ளனர். அந்த மக்களோ வீதிகளில் அமர்ந்திருந்து தமது சொந்த மண்ணை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த அவல நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “தமிழ் மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடக்கில் அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர […]
பாபுல், பீடா, மாவா விற்றால் ஒருவருட சிறைத்தண்டனை! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு
பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் […]
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவது எப்படி? – கால அட்டவணை தயாரிக்கவுள்ளது கூட்டமைப்பு
இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வடக்கில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அவசரமாகச் சந்திப்பதற்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் […]





