கேகாலை சிறைச்சாலைக்கு குண்டு துளைக்காத பேருந்து: சுவாமிநாதன் அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கேகாலை சிறைச்சாலையின் உபயோகத்துக்கு, குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்தே குண்டு துளைக்காத பேருந்தை கொள்வனது செய்வது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 10 நாட்களுக்குள் குறித்த குண்டு துளைக்காத பேருந்து, கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பேருந்து ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாயின் சுமார் 20 இலட்சம் வரை செலவாகும் எனவும், இந்த பேரூந்தை நவீன மயப்படுத்த 7 இலட்சம் ரூபாய் மாத்திரமே செலவானதாகவும் சிறைச்சாலை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இரு பொலிஸ் அதிகாாிகள், பாதாள உலக குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *