ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணையுமா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இன்று பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, லசந்த அலகியவன்ன ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்பில் தான் மற்றும் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, சி. பி. ரத்நாயக்க ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம்மோடு இணைந்து போட்டியிட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *