பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

எனவே, வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரித்தது. வடகொரியாவும் சலிக்காமல் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக எந்தவித முன் நிபந்தனையும் இன்றி அமெரிக்கா வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், இதனை நிராகரித்துள்ளது வடகொரியா.

வடகொரியா தரப்பில் இது குறித்து கூறியதாவது, வாஷிங்டன் இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் (வட கொரியா) இதில் அணு ஆயுதங்களை கைவிடுவதை ஏற்று கொள்ளாவிட்டால் ஐநா-வின் தீர்மானங்களை எங்கள் மீது திணிக்கும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது என்று குறிப்பிட்டு பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *