வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. வரும் டிச., 8 வரையிலான காலகட்டத்தில் இது வட மேற்கு திசையில் ஆந்திர கரையை நோக்கி நகரும்.

தமிழகம் மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு (டிச.,6,7 8) தேதிகளில் வங்க கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை ஆயக்குடியில் 7 செ.மீ., மழையும், ராஜபாளையம், தென்காசி,அறந்தாங்கியில் தலா 1 செ.மீ., மழையும் பதிவாகயுள்ளது.

அடுத்த 2 நாட்கள் 6, 7 தேதி தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *