நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டு, விஜயதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முனைப்பில் ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விஜயதாச தொடர்பில் கட்சிக்குள் அண்மைய காலமாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விஜயதாசவை வெளியேற்றுவது ஏனைய அணிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். எனவே இதனை முறையாக கையாள வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், நாளை மறுதினம் சிறிகொத்தவில் கூடவுள்ள ஐ.தே.க.வின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *