தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்! கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று 31 ஆவது நாளாகவும் கிளிநொச்சியில் போராட்டம் தொடர்கின்றது. வடக்கு, கிழக்கில் ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் போராட்டங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன. வடக்கில் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் […]
Other News
ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை!
ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை! இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இந்த அமர்வில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும். […]
கலப்புப் பொறிமுறைக்கு ஒருபோதும் இணங்காது இலங்கை! – ரணில் திட்டவட்டம்
கலப்புப் பொறிமுறைக்கு ஒருபோதும் இணங்காது இலங்கை! – ரணில் திட்டவட்டம் “நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு இலங்கை ஒருபோதும் இணங்காது. அத்துடன், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திலும் இலங்கை இணைந்துகொள்ளாது.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறியவை வருமாறு:- “இலங்கையில் நடைபெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இவை குறித்து விசாரணை […]
இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார்
இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இரகசிய இராணுவக் கொலைக் குழுவை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டார் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார். 2005 […]
ஜெனிவாவில் இலங்கை தண்டிக்கப்படுவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும்! – ஸ்டாலின் வலியுறுத்து
ஜெனிவாவில் இலங்கை தண்டிக்கப்படுவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும்! – ஸ்டாலின் வலியுறுத்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தண்டிக்கப்படுவதை இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஆனால், இந்த விசாரணையைத் தாமதப்படுத்தும் வகையில் […]
எமது விடுதலை கானல் நீராகுகின்றது! – சார்ள்ஸ் எம்.பியிடம் அரசியல் கைதிகள் கவலை
எமது விடுதலை கானல் நீராகுகின்றது! – சார்ள்ஸ் எம்.பியிடம் அரசியல் கைதிகள் கவலை “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இலங்கை அரசுக்கு ஏற்கனவே கால அவகாசம் […]
யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன் துாக்கில்
யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன் துாக்கில் திருநெல்வேலி சந்தியில் கடையில் துாக்கில் தொங்கி மரணமான 34 வயதான சுந்தரலிங்கம் விஜதன் வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றில் லட்சக்கணக்கான காசு கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாலேயே துாக்கில் தொங்கி மரணமனதாக தெரியவருகின்றது.
சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை
சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்- […]
கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ! ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் அருகே கார் குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். குண்டு வெடிப்பால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மொசூல் நகரில் கட்டுப்பாட்டை […]
உலக மனநலிவுக் குறைபாடு தினம் இன்று
உலக மனநலிவுக் குறைபாடு தினம் இன்று ‘டவுண் சிண்ட்ரோம்’ ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைப்பது தவறு. மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும். தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பர். மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று […]





