பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவு அளித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் தற்போதைய இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். […]
Other News
சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது
சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேச தமிழ்மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வேறு பிரதேச சிங்கள மீனவர்கள் தமது நிலங்களுக்கு தற்போது உரிமை கொண்டாடிவருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கொக்கிளாய் கடலில் தமது மீன்பிடிக்கான கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய வழக்கு விசாரணைகளில் கொக்கிளாய் மீனவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில், வழக்கை அடுத்த மாதம் […]
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், தேங்காய் உடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னால் ஏ9 வீதியின் அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், […]
நாட்டில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் […]
கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 1500 ஏக்கா் காணி
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இராணுவத்தினர் இதுவரை 1515.7 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் தனியார் அனுமதிப்பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான 973.5 ஏக்கர் […]
27ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு
தமிழ் மக்கள் பேரவையினரால் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரவையின் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத்தருமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை வலுப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு நீதி கோரும் வகையில் […]
மீத்தொட்டமுல்ல அனர்த்தம் ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதிநிதிகள் குழுவின் தலைவரான ஆவைளரவயமந ரேஅயாயவய அவர்கள் அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் […]
போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி
கடுமையான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜபா காலாட்படை பிரிவின் தலைமை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஜபா படைப்பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இவ்வாரம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அப் பதவிக்கு சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய இராணுவத்தின் 58ஆவது […]
ஜனாதிபதியாகும் கனவு பஸிலுக்கு இல்லை என்கிறது மஹிந்த அணி!
“ஜனாதிபதியாகும் கனவில் பஸில் ராஜபக்ஷ இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் பஸில் உடனே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்.” – இவ்வாறு மஹிந்த அணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “எமது அணியின் சார்பில் பஸில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில், ஜனாதிபதியாகும் கனவில் அவர் இல்லை. […]
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும்? – முயற்சிப்போம் என்கிறார் மாவை
“நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு வாக்களித்தோம். ஆனால், அந்த விடயங்கள் எவையும் உருப்படியாக நடைபெறவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசில இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு ஒன்றைப் பெற்றுத்தர முயற்சி செய்கின்றோம்.” […]





