மன்னார்- முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கம் காணப்பட்டுள்ள போதிலும், கடற்படை முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, சிறைச்சாலைகள் மறுசீரமைப்ப, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன […]
Other News
இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா பிரதமருடன், அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க […]
எரிக் சொல்ஹெய்மின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது நல்லாட்சி : பந்துல
ஸ்ரீலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்மின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் ஓரங்கமாக புலம்பெயர் சமூகத்தினரின் முதலீடுகளை கவரும் வகையில் சட்டமூலங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டினார். ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு […]
எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யவில்லை
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நடக்காத ஒன்றைப் பற்றி கற்பனையாகச் சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் […]
முல்லைத்தீவில் 27 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கு அழைப்பு
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வழங்கியுள்ளது. நீலமீட்பு போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து, கடந்த 49 நாளாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் […]
நீதிமன்றத்தின் உத்தரவை கிழித்தெறிந்து காலால் மிதித்த சம்பவம் திருகோணமலையில்
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிரதியை வேலையற்ற பட்டதாரிகள் கிழித்தெறிந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண சபையின் 76 ஆவது அமர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மாகாண சபைக்கு முன்னாலுள்ள பிரதான வீதியை வழிமறித்து வேலையற்ற பட்டதாரிகள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் கிழக்கு […]
திருமலை எண்ணெய் கிணறுகள்;பேச்சுவார்த்தையின் பின்னரே முடிவு எடுக்கப்படும்
திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கும், திருகோணமலை எண்ணெய்க் கிணறுகள் விற்பனை விவகாரத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. […]
கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க கோரி தேங்காய் உடைத்து போராட்டம்
கேப்பாப்பிலவில் உள்ள தங்கள் பூர்வீகக் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 108 தேங்காய் உடைத்துமக்கள் முன்தினம் நேற்று வழிபாட்டுப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேப்பாப்பிலவில் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரி மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு […]
ஆஸியிலிருந்து இலங்கை வந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதை!
ஆஸ்திரேலியாவிலிருந்து சமீபத்தில் இலங்கை வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஆஸ்திரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை வந்த வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை […]
வடக்கு, கிழக்கு ஹர்த்தால்: அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அழைப்பு […]





