“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அதில் இணையுமாறு அழைக்கின்றோம்.” – இவ்வாறு கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டடோர் உறவினர்கள் சங்கத் தலைவி கலாரஞ்சினி இது தொடர்பில் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி […]
Other News
சு.கவின் மே தினக் கூட்டத்துக்கு மஹிந்தவுக்கும் அழைப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், மே தின வரலாற்றில் […]
படையினரிடம் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் மாத்திரமே வேண்டும்! – கதறி அழுகின்றனர் உறவுகள்
“எமது பிள்ளைகள் உயிரோடு உள்ளதாக இராணுவப் புலானாய்வாளர்கள் தெரியப்படுத்தியபோதும் ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது பிள்ளைகள் விடுவிக்கப்படவில்லை. படையினரிடம் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் மாத்திரமே எமக்கு வேண்டும்.” – இவ்வாறு கதறி அழுகின்றனர் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளே இவ்வாறு கதறி அழுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் […]
மயிலிட்டித்துறைமுகப் பகுதி வெகுவிரைவில் விடுவிப்பு! – இருவேறு கூட்டங்களில் உறுதி
மயிலிட்டித்துறைமுகம் உள்ளடங்கலாக அந்தப் பிரதேசத்தைப் பாதுகாப்புத் தரப்பினர் வெகுவிரைவில் விடுவிப்பார்கள் என்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருவேறு கூட்டங்களில் உறுதியளிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளன. அவற்றை விடுவிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் – அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோதும் அது விடுவிக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில்கூட […]
புதிய அரசமைப்பு குறித்து நாளை யாழில் செயலமர்வு!
புதிய அரசமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது எனப் புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக இளைஞர் அமைப்புகளுக்கு புதிய அரசமைப்புத் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் […]
காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டியதாக கட்சியில் இருந்து ஆறாண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்ட பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லி பிராந்தியத்துக்கான காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மற்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் அஜய் மக்கான் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி இருந்தார். ராகுல் காந்தி […]
ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி
ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார். […]
அமெரிக்காவில் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையங்களில் ஊடுருவல் – ரஷிய எம்.பி. மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணைய தளங்களில் ஊடுருவி கிரெடிட் கார்ட் தகவல்களை களவாடி 16.9 கோடி டாலர்கள் இழப்பு உண்டாக்கிய ரஷிய நாட்டு பாராளுமன்ற எம்.பி.யின் மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோமன் செலெஸ்னேவ்(32). ரஷிய பாராளுமன்ற உறுப்பினர் வலேரி செலெஸ்னேவ் என்பவரின் மகனான இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு நாட்டுக்கு சென்றிருந்தபோது திடீரென்று மாயமானார். அவர் அமெரிக்க உளவுத்துறையினரால் கடத்தப்பட்டது […]
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு – டி.டி.வி.தினகரன் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம்
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் […]
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை […]





