Other News

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேரம் கனிந்துவிட்டது! – மஹிந்த கூறுகின்றார்

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய காலம் கனிந்துவிட்டது. எனவே, சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். அதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நாட்டில் தற்போது நடப்பவற்றைப் பார்க்கையில் ஆட்சியைக் கவிழ்க்கும் அந்தத் தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணரக்கூடியதாக இருக்கின்றது. அதிகாரம் […]

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி

அரசமைப்பு தயாரிப்பு குறித்து இரண்டு வாரங்களில் மைத்திரி விசேட அறிவிப்பு!

அரசமைப்பு தயாரிப்புப் பணி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம். இதன்போது அரசமைப்பு பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவர் விளக்குவார் என்று அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு அது தொடர்பில் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் […]

மஹிந்த கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் கூட்டரசு அதிர்ச்சி!

மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்குக் கிடைத்த வெற்றியால் மைத்திரி – ரணில் விக்கிரமசிங்க அரசு அதிர்ச்சியடைந்துள்ளது என்று ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மே தினத்தின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பிரதிபலித்துள்ளது. இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மஹிந்த அணியினரின் மே தினப் […]

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், […]

தமிழர்களின் பிரச்சினையை மோடியின் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானம்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, அநேகமாக 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக காணி […]

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆப்கானிஸ்தான் தலைவன் கொல்லப்பட்டான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவன் அப்துல் ஹசிப் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் சுமார் ஆயிரம் பேர் தற்கொலைப்படை கூட்டமாக இயங்கி வருகின்றனர். காபுல் நகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி மீது கடந்த மார்ச் மாதத்தில் இவர்கள் நடத்திய தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த […]

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுக்கு ‘தாஸ்’ குண்டு என்று பெயரிடுவதா?: போப் ஆண்டவர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் வீசிய குண்டுக்கு ‘தாஸ் குண்டு’ என அமெரிக்கா பெயர் சூட்டியதற்கு போப் ஆண்டவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் அமைத்து பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு அமெரிக்க விமானப் படையின் போர் விமானம் மிகப்பெரிய 10 டன் எடையுள்ள குண்டு வீசியது. இது அணுகுண்டு அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. ‘ஜிபியூ-43’ என்ற அக்குண்டுக்கு ‘தாஸ் குண்டு’ (மதர் […]

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

மறிச்சுக்கட்டி, மாவில்லு குறித்து புதிய வர்த்தமானியில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த மாநாடு கூட்டப்படவுள்ளது என முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. […]

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: இன்பராசா

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை பிரதானமாகக் கொண்டே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதென, அக் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்துள்ளார். அத்தோடு, மக்களது பிரச்சினைகளையும் வெளிக்கொணர்ந்து தாமாகவே அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு, புதுக்குடியிருப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே […]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

இறுதி யுத்த அழிவுகளை பறைசாற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் துக்க தினத்தன்று, விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி அதனை கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாமென கோரப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவியான எஸ்.புஸ்பாம்பாள் கூறுகையில், பல இழப்புகளை சந்தித்த அந்த நாளில் மக்களின் உணர்வுகளுக்கு […]