Other News

தலாய்லாமாவை அமெரிக்க எம்.பி.க்கள் குழு சந்திப்பதா? அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்க பாராளுமன்ற எம்.பி.க்கள் குழுவினர், சமீபத்தில் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவுக்கு வந்து தலாய்லாமாவை சந்தித்துப் பேசியது தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதியாக சீனா கருதி வருகிறது. தலாய்லாமாவுடன் யார் தொடர்பு வைத்துக்கொண்டாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சீனாவின் வழக்கம். இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்ற ஜனநாயக கட்சி தலைவர் நான்சி பெலோசி தலைமையில் இரு கட்சி […]

சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி – 20 பேர் காயம்

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியம் உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.58 மணிக்கு இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. பூமி அதிர்ச்சியால் அங்கு இருந்த மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடினார்கள். மரங்களால் செய்யப்பட்ட […]

இறக்காமத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் அதிகளவில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்றைய பௌத்த பிக்குகள் சிலருக்கு வழிப்பாடுகளில் ஈடுபடும் அனுமதியை பொலிஸார் வழங்கியுள்ளனர். குறித்த பகுதிக்குள் எவரும் பிரவேசிக்க கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், வெசாக் தினத்தை முன்னிட்டு இறக்காமம் மாயக்கல்லி மலைக்கு பக்தர்கள் வழிப்பாட்டிற்காக சென்றுள்ளனர். இதற்கமைய மாயக்கல்லி மலைப் பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க 1000ற்கும் […]

கூட்டமைப்பு அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அபிவிருத்தியையும் மையப்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வனையும், இறுதி தீர்வினையும் பெறுவதற்கே போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்முனை – பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே […]

மோடிக்கு பாதுகாப்பு வழங்க கறுப்புப் பூனைகள் கொழும்பு வந்தன

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று மாலை கொழும்பு வரவுள்ளார். நாளை பிற்பகல் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான பணிகளில் சிறிலங்கா அரசாங்கம் 6000 காவல்துறையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது. எனினும், இந்தியப் பிரதமருக்கான […]

காலி கடற்படைத் தளத்தில் நெதர்லாந்தின் ஆயுதக்களஞ்சியம்

இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் தமது நாட்டுக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை, நெதர்லாந்து அரசாங்கம் காலி கடற்படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கவுள்ளது. சிறிலங்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் வகையில், தமது நாட்டுக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் நெதர்லாந்து கையெழுத்திடவுள்ளது. சிறிலங்காவின் காலி துறைமுகத்தில் […]

சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. Tramadol என்ற வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் 37 மில்லியன் மாத்திரைகள் இந்திய மருந்து நிறுவனம் ஒன்றினால், லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறிலங்காவில் இருந்தே இந்த மருந்துக் கொள்கலன்கள், கப்பல் மூலம் லிபியாவுக்கு அனுப்பப்பட்டது. லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் தேவைக்காகவே இவை அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தாலியின் ஜினோவா […]

சிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி

சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார். அங்கிருந்து வாகனம் மூலம் கங்காராமய விகாரைக்குச் சென்று, சிறிலங்கா பிரதமருடன் இணைந்து அலங்கார விளக்குகளை திறந்து […]

தொண்டாவும் திகாவும் நாளை ஒரே மேடையில்! சங்கமிக்கவைக்கிறது மோடியின் வருகை!! – ஹட்டனைச்சூழ வரலாறுகாணாத பாதுகாப்பு

மலையக அரசியல் களத்தில் இரு துருவங்களாக வலம்வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமை ஒரே மேடையில் அமரவுள்ளனர். இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை ஹட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நோர்வூட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து மலையக மக்களுக்காக அவர் சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், இந்திய அரசின் நிதியுதவியுடன் […]

வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

வடக்கு – கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை அமைப்பதற்கு நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை […]