அரசமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய முதன்மை இடம் பாதுகாக்கப்படும் என்றும், அதேபோல் சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசின் நிகழ்ச்சிதிட்டமாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகுக்கு எடுத்துச்செல்லும் நோக்கிலேயே சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இலங்கையில் […]
Other News
வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட் பார்’! – சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை; கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைப்பு
வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட் பார்’! – சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை; கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைப்பு யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு […]
தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்கும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக அரச வைத்தியர் சங்கம் போர்க்கொடி!
இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தன்று தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முறையில் ஒருசில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டிருப்பதை இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த எதேச்சதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைக்கும் எதிராக தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நளின் டீ ஹேரத் தெரிவித்துள்ளார். “இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் அரசைக் கவிழ்க்கவோ, புதிய […]
ஜனாதிபதி தலைமையில் அடுத்தமுறை கூடுவது புதிய அமைச்சரவையாகவே இருக்கும் என எதிர்பார்ப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தபடியாக நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டம் அநேகமாக மீளாய்வு செய்யப்பட்ட அமைச்சரவையாக இருக்கலாம் என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளளன. அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்து முடிந்ததும் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படுவது சம்பிரதாயமாகும். எனினும், இறுதியாக நடந்த கூட்டத்தில் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படாததால் அடுத்த கூட்டம் அநேகமாக மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவையின் கூட்டமாக இருக்கலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது அரசமைப்புத் […]
சு.கவின் அமைச்சரவை பேச்சாளராக தயாசிறியை நியமிக்க அனுமதி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அமைச்சரவை பேச்சாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை நியமிக்க கட்சியின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர் தயாசிறி ஜயசேகரவின் பெயர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த […]
சுதந்திரத்தை சொந்த மண்ணில் இழந்து வாழும் முள்ளிக்குளம் மக்கள்
முள்ளிக்குளம் மக்களின் 38 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் அவர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்று 10 தினங்களை கடக்கின்ற போதும் அந்த மக்கள் தமது சொந்த காணிகளில் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார். முள்ளிக்குளம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”முள்ளிக்குளம் […]
மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய தூதரகம் முற்றுகை
பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், மீனவர் பிரச்சினை தொடர்பாக அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களால் கடல் வளம் அழிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள், அத்துமீறும் […]
தென் கொரியா அதிபர் ஆகிறார் மூன் ஜே-இன்: கருத்துக் கணிப்பில் தகவல்
தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி தென் கொரியாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் […]
சோமாலியா ராணுவ தளத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல்: வீரர்கள் பலர் உயிரிழப்பு
சோமாலியாவில் ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய பாணியில் செயல்படும் சோமாலியா அரசாங்கத்தை வீழ்த்த அல்-ஷபாப் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நகர்ப்புறங்களில் ஆதிக்கம் செலுத்திய அல் ஷபாப் தீவிரவாதிகளை ஆப்ரிக்க யூனியன் மற்றும் சோமாலி படைகள் விரட்டியடித்துள்ளன. ஆனால், சிறிய மற்றும் தொலைதூர கிராமப் புறங்களை அவர்களிடம் இருந்து பாதுகாக்க போராடி […]
அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி
அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை (வயது 40) ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். கென்டக்கியில் வசித்து வரும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் ஆளுங்கட்சி […]





