அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இழுபறி நிலவி வந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களின் போது, பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் […]
Other News
சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாகவே அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்துரையாடியுள்ளனர். இதனிடையே, அமெரிக்க பிரதிநிதிகள் சபை […]
வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு!
வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு! மைத்திரி அணி வசமுள்ள வட மத்திய மாகாண சபையின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 17 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் […]
மே 18 முல்லைத்தீவுக்கு மைத்திரி செல்லலாமா? – ஆராய்கிறது அவரது செயலகம்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்சித் திட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிப்பது என்றும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் […]
முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு அரசு சவால்
“ஒருவாரம் கால அவகாசம் தருகின்றோம் முடிந்தால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுங்கள்.” – இவ்வாறு மஹிந்த அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டு வந்த வட மத்திய மாகாண அமைச்சர் கே.எச்.நந்தசேனவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அப்பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.ஹேரத் […]
எந்தவொரு மாகாண சபையின் ஆட்சியையும் மஹிந்த அணியால் பிடிக்கவே முடியாது! – சு.க. திட்டவட்டம்
மஹிந்த அணியால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியையோ அல்லது வேறு எந்த மாகாண சபைகளின் ஆட்சியையோ பிடிக்கவே முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாண சபையின் பெரும்பான்மை மஹிந்த அணியிடம் சென்றுள்ள நிலையிலயே சு.கவின் பொதுச் செயலர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மாகாண சபைகளில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெறாது. எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க […]
மூன்று மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி தீவிர முயற்சி!
வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது. பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண சபைகளின் அரச தரப்பு உறுப்பினர்களை நீக்குவதற்கு மைத்திரி அரசு எடுத்த அதிரடி முடிவுகளின் பிரதிபலனாக அம்மாகாண சபைகளில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. அத்துடன் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். வட மத்திய, மத்திய மற்றும் […]
ரணிலின் கோரிக்கையின் பிரகாரமே மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகள்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடில்லி சென்றிருந்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போதே ரணிலால் மலையக மக்களுக்காக மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 […]
இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளை அச்சுறுத்திய சைபர் தாக்குதல்: மூல காரணம் என்ன?
இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை முடக்கிய சைபர் தாக்குதல்களினால், பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு விரைவான சேவையை வழங்கி, நமது பணிச்சுமையை குறைக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்போது மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக சமுதாயத்திற்கு இந்த சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில், நேற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு […]
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை மட்டுமல்லாது அப்பாவி மக்களையும் குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்கள் நடத்துகின்றன. இந்த மாத தொடக்கத்தின்போதுகூட காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த […]





