Other News

லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மானிட விழுமியங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் லண்டனில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் காயப்படுத்தியதுமான […]

இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குக! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்து

“இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள், இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனவே, அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிடவேண்டும். இராணுவம் அவர்களைக் கொலைசெய்துவிட்டதென்றால், குற்றத்தை மேற்கொண்டவர்களுக்குத் தண்டனையை வழங்க வேண்டியதுதானே.” – இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி வடக்கு, கிழக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்ற அவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா […]

தீவிரவாதத் தாக்குதல்களால் பீதியில் உறைந்தது லண்டன்! 7 பேர் பலி; 48 பேர் படுகாயம்!!

தாக்குதல்தாரிகள் மூவர் சுட்டுக்கொலை நகரமெங்கும் உச்சக்கட்டப் பாதுகாப்பு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் பிரிட்டனின் தலைநகரான லண்டனில் நேற்றுமுன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர் தீவிரவாதத் தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட மூவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மாத காலப்பகுதியில் பிரிட்டனில் இடம்பெற்றுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பதுடன் பொதுத்தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் […]

தமிழ் அரசியல் கைதிகளை கைவிடுவதானது தமிழர் அரசியலை கைவிடுவதற்கு சமனாகும்!

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர். இந்தச் சந்திப்பு […]

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாம்! – சந்திரிகா அம்மையார் கூறுகின்றார்

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் அப்படி எவரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை. அப்போது ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் யாவரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு […]

மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை!

மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை! – அரசிடம் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம்கள் மீதான மத – இன வெறுப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசும் – பொலிஸாரும் உறுதிசெய்ய வேண்டும் என்று, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மாங் தெரிவித்தார். தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிர்சர்லாந்து தூதரகப் […]

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வடக்கு ஆளுநரின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி!

“காணாமல்போனோர் விவகாரத்துக்கு எந்த விசாரணையும் இடம்பெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் கூறுவதற்கு அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சட்ட ஏற்பாடுகளை அறியாத ஆளுநர், தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்கூறுவதை ஏற்க முடியாது.” – இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “காணாமல்போனோர் விவகாரத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான் நாடாளுமன்றில் சட்டவரைபு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் தற்போது சில திருத்தங்களுக்காக உள்ளது. அதன்பின்னர் காணாமல்போனோர் அலுவலகம் […]

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டத்தில் திருத்தம்! – செவ்வாயன்று வருகின்றது சபைக்கு

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அறியமுடிகின்றது. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் எனவும், அதன் பின்னர் விரைவில் காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்படக் கூடும் எனவும் இதனுடன் தொடர்புடைய தரப்பினர் தெரிவித்தனர். காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டவரைபு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முன்வைத்த திருத்தம் உள்ளடக்கப்படவில்லை […]

வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் சுயநலம்; அதுவே அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம்! – சீறுகின்றார் மைத்திரி

“அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்துச் செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அரசு விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றிகொள்வதற்கு அரசியல்வாதிகள் சிலர் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரியவைத்து அரசின் […]

ஜப்பான் பறந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்குச் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 07.15 மணிக்கு இலங்கையிலிருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. ஜப்பானிலுள்ள இலங்கையர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த விஜயத்தில் ரொஷான் ரணசிங்க, பியல் நிஷாந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.