Other News

அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு.கவின் சார்பில் தயாசிறி நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்கவுள்ளார். அவரின் பங்குபற்றலை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக இருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் […]

அமைச்சுகளுக்கு இவ்வருடம் வாகன இறக்குமதி இல்லை! – பாதிப்பு விவரங்களைக் கோருகிறார் ஜனாதிபதி

“அமைச்சுகள் உட்பட சகல அரச நிறுவனங்களுக்குமான வாகன இறக்குமதியை இவ்வருடத்தில் முழுமையாக நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது”  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான திட்டத்தை விரைவாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டத்தின்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். “மண்சரிவு, வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த […]

பேரனர்த்தம்: 194 சடலங்கள் இதுவரை மீட்பு! 99 பேரைக் காணவில்லை!!

இலங்கையில் கடந்த வாரம் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பெருமளவான வாகனங்களும், உடமைகளும் அழிவடைந்துள்ளன. ஆயிரத்து 402 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 99 பேர் காணாமல்போயுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 20 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து 224 பேர் […]

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை விரும்புகின்றனர் தெற்கு கடும்போக்குவாதிகள்! – ஜே.வி.பி. கூறுகின்றது

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புகின்றனர் என்றும், தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாதுவிட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே இறுதியில் வென்றுவிடும் என்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “போர் முடிந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை இந்த நாட்டுப் பிரஜைகளாக […]

வடக்கை இப்போது ஆழ்வோர் புலிகளே! – இது நாட்டுக்குப் பேராபத்து என்கிறது மஹிந்த அணி

“வடக்கு மாகாணத்தை இப்போது விடுதலைப்புலிகளே ஆட்சி செய்கின்றனர். அங்கு கடும்போக்குவாதிகள் தலைதூக்கிவிட்டனர். அதேபோன்று தெற்கில் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தெற்கை அவர்களே ஆள்கின்றனர். மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்த பின்னரே இந்த அபாயகரமான – பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹிந்த ஆட்சியில் அழிக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் தற்போதைய தேசிய அரசில் மீண்டும் வந்துள்ளன என்றும் மஹிந்த அணி […]

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு! இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அரசால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,  கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இந்த விசேட அறிவித்தலை கல்வி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது எனவும் அவர் […]

மூன்று மாணவிகள் துஷ்பிரயோகம்! – மூதூரில் பதற்றம்

மூதூர் – பெரியவெளி, மல்லிகைத்தீவில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அங்கு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் மாலைநேர (பிரத்தியேக) வகுப்புக்குச் சென்ற மூன்று மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களுள் சிலர் இம்மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்கள் உடனே  தலைமறைவாகினர். அவர்களுக்கு […]

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் விநாயகமூர்த்தி! – இரங்கல் செய்தியில் சுமந்திரன் தெரிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. இவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அப்பாத்துரை விநாயகமூர்த்தி நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மிகச் சிறப்பாகச் […]

தொடர்கின்றது பேரவலம்! – பலியானோர் எண்ணிக்கை 177 ஆக உயர்வு; 109 பேர் மாயம்

இலங்கையில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது என்றும், 109 பேர் காணாமல்போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 392 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 18 ஆயிரத்து 612 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 928 பேர் 366 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் […]

அரசியலில் நேர்மையை கடைப்பிடித்தவர் அப்பாத்துரை: சம்பந்தன் இரங்கல்

அரசியலில் நேர்மையும், அனைவரையும் அரவணைத்துச் செயற்படும் உயரிய பண்பும் கொண்டு விளங்கிய அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இழப்பு, தமிழ் மக்களுக்கும் அவர் சார்ந்திருந்த தமது கட்சிக்கும் பேரிழப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, உடல்நலக் குறைவால் தமது 84 ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரதிநிதிகள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், […]