Other News

அதிமுகவின் பிரச்னைகளை சரி செய்யும் மருத்துவர் டி.டி.வி தினகரன்

சென்னையில், டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அவரை பாதுகாத்தவர்கள், சசிகலா குடும்பத்தினர்தான் என கூறினார். எடப்பாடி பழனிசாமியையோ, ஓ. பன்னீர் செல்வத்தையோ தலைவர்களாக ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நடிகர் செந்தில், தேர்தலைச் சந்தித்து முதலமைச்சரானால் மட்டுமே அவர்களை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார். தனக்குப் பிறகும் 100 ஆண்டுகளைக் கடந்தும் அதிமுக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் இயக்கமாகத் திகழும் […]

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்த எந்த காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும் போது […]

மண்டைதீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் கடலில் மூழ்கி மரணம்…

இச் சம்பவம் நேற்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளன, உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு பணிப்புரை. 18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது […]

நோர்வே தமிழ் மாணவரொருவர் துரண்ணியம்(trondheim ) பகுதியில் சடலமாக மீட்பு

நோர்வே நிடேல்வா(nidelva ) பகுதியில் தமிழ் மாணவன் ராகவன் ஜீவகரன் வயது 21, திங்கள் அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,ராகவன் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான எந்த சான்றுகளும் இல்லை. ராகவன் ஆகஸ்ட் 15 முதல் காணாமல் போயிருக்கின்றார். அதன் பின்னர் அவரது சடலத்தை போலீசார் நிடேல்வா(nidelva ) பகுதியில் திங்கள் இரவு அன்று பழைய பாலத்தின் கீழே கண்டுபிடித்தனர். செவ்வாய்கிழமையன்று அச் சடலம் ராகவன் உடையது […]

எகிப்து: பஸ்சுடன் லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை மத்திய பகுதியான பெனி சூயெப் நகருடன் இணைக்கும் பிரதான சாலையில் இன்று பஸ்சுடன் லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. சாலையின் எதிர்திசையில் வேகமாக வந்த லாரி 62 பேருடன் வந்த […]

ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்: ரஷியா கவலை

ஜப்பான் நாட்டின் வான்வெளியில் ஏவுகணையை செலுத்தியுள்ள வடகொரியாவின் போக்கு கொரியா தீபகற்பப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக ரஷியா கவலை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல்பகுதியை குறிவைத்து கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணையை வடகொரியா இன்று செலுத்தியது. ஜப்பானின் வடபகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவின் மேற்பரப்பில் பறந்த இந்த சக்திவாய்ந்த ஏவுகணை 550 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து, 2700 கிலோமீட்டர் தூரத்தை கடந்துவந்து ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது. இந்த ஏவுகணை விழுந்த பகுதிக்கு […]

டிரம்ப் கருத்தால் அமெரிக்காவுடனான உறவை தற்காலிகமாக துண்டிக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தால் அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் வெளியிட்டார். அதில், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்திவரும் தாலிபான், ஹக்காணி உள்ளிட்ட பெருவாரியான தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் டிரம்ப் காரசாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும், தேவைப்பட்டால் பாகிஸ்தானில் […]

10 நிமிடத்தில் காப்பாற்றுகிறேன் என சிறிகஜன் கூறினார்! வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் சாட்சியம்

எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றனர். 10 நிமிடத்தில் நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். இவ்வாறு சாட்சியமளித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமார். மாணவி கொலை […]

இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்த இந்திய கண்காணிப்பு விமானம்!

இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்து தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டே இலங்கை வான் பரப்பில் பிரவேசித்து தேடுதல் நடத்தியுள்ளதாக இந்திய கடற்படையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கேரளாவின் கொல்லம் கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை மோதிய கப்பல் ஒன்று தென்திசை வழியாக தப்பிச் சென்றிருந்தது. குறித்த கப்பலானது ஹொங்கொங்கில் […]

இலங்கை அணியின் தொடர் தோல்வி! ஜயசூரிய எடுத்த திடீர் முடிவு

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். பதவி விலகல் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று பகல் இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி அண்மை காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்நிலையிலேயே, தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு […]