Other News

மகிந்த

பயங்கரவாதத்தை விட பாதாள உலகக்கும்பல் ஆபத்தானது : மஹிந்த

பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ​தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத குழுக்களை விட பாதாள உலகக்கும்பல்கள் ஆபத்தானவை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வலியுறுத்தியுள்ளார்.  

வித்தியா படுகொலை: மேலும் சிலர் கைது?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் […]

யாரும் வரலாம் எவரும் போகலாம்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில் […]

பிள­வ­டைந்­து­விட முடி­யாது : இரா.சம்­பந்தன்

சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்து விட முடி­யாது. சுரே­ஷுடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தற்கு தயா­ர­ாகவே உள்ளேன். இவ்­வி­டயம் குறித்து அடுத்த கட்ட நட­வ­டிக்கைகள் விரைவில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான வகி­பா­கத்­தினைக் கொண்­டி­ருக் கும் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­தி­கா­ர­மாக தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என கூட்­ட­மைப்பின் ஸ்தாபக பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் […]

மதத்தின் பெயரால் உங்கள் செயல் தீவிரவாதம் இல்லை என்றால் எதற்கு பெயர் தீவிரவாதம் பிரகாஷ் ராஜ் கேள்வி

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்” என விமர்சித்தார். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இது பற்றி பேசிய போது எந்த வழக்கையும் எதிர் கொள்வேன், யாருக்கும் அஞ்ச மாட்டேன் என பிரகாஷ்ராஜ் கூறினார். இதையடுத்து தற்போது மீண்டும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கிறார். […]

அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு

வடகொரியாவை அச்சுறுத்தி மிரட்டுகிற வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. ஒலியை விட வேகமாக செல்கிற சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த பி–18 லேன்சர் போர் விமானங்களை தென் கொரியாமீது அமெரிக்கா பறக்கவிட்டது. குவாம் தீவில் உள்ள ஆன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற 2 பி–18 லேன்சர் போர் விமானங்களுடன், ஜப்பானின் போர் விமானங்களும் சேர்ந்துகொண்டன. இதுகுறித்து அமெரிக்க விமானப்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் […]

இத்தாலி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழப்பு

லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் நேற்று நடந்தது. லிபியாவில் இருந்து சில படகுகளில் ஏராளமானோர் புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது படகுகளின் என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகுகள் கடலில் மூழ்கின. அப்போது அங்கு […]

கேட்டலோனியா தலைவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக, கார்லஸ் அரசை ஸ்பெயின் அரசு பதவியில் இருந்து அகற்றியது. கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட கார்லஸ், தனது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பலருடன் பெல்ஜியத்தில் உள்ளார். அதே நேரத்தில் அங்கு தான் அரசியல் புகலிடம் கேட்க செல்லவில்லை என்று கூறினார். […]

சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று […]